மீத்தேன் திட்டத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கும்: எச்சரித்த மேதா பட்கர் – ஆதரவு தெரிவித்த வைகோ
சென்னை: மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தால் காவிரி டெல்டா மாவட்டங்களில் சுற்றுச்சூழல் பாதிப்பு அடையும் என சமூக சேவகர் மேதா பட்கர் எச்சரித்துள்ளார்.
நாகை மாவட்டம், சீர்காழியை அடுத்த பழையபாளையம் என்ற இடத்தில், ஓ.என்.ஜி.சி.,யின் மீத்தேன் எடுக்கும் பிளான்ட் உள்ளது. இந்த பிளான்ட்டை, சமூக ஆர்வலர் மேதா பட்கர் நேற்று பார்வையிட்டார்.

முன்னதாக சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் மேதா பட்கர் பேசினார். அப்போது அவர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் மீத்தேன் எடுப்பு திட்டத்தை செயல்படுத்துவதால் நிலத்தடி நீர்மட்டம் குறையும், குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகளை காலி செய்யும் நிலை ஏற்படும். காவிரி டெல்டா பகுதியில் சுமார் 20 லட்சம் ஏக்கர் விவசாயம் அழியும் நிலை ஏற்படும். இதனால் இந்த பகுதி மக்கள் பெரும் பாதிப்பு அடைவார்கள்.
பூமியில் 2 ஆயிரம் அடி துளை போட்டு ரசாயனத்தை செலுத்தி பாறைகளை வெடிக்க வைத்து மீத்தேன் எடுக்கப்படும். இதனால் சுற்றுச்சூழல் பெரும் பாதிப்பு அடையும். எனவேதான் மேற்கத்திய நாடுகள் இத்திட்டத்தை நிறுத்திவிட்டன.
வளர்ச்சி என்று கூறி மத்திய அரசு இத்திட்டத்தை பற்றி மக்களிடம் கருத்து கேட்காமல் செயல்படுத்துகிறது. இத்திட்டம் பற்றி விவரங்கள், ஆய்வுகள் அனைத்தையும் தமிழில் மொழி மாற்றம் செய்து, கிராம சபைகளில் மக்கள் தெரிந்து கொள்ளுமாறு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

தமிழக அரசு மக்கள் நலன் கருதி மீத்தேன் எரிவாயு திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும். நிலத்தை கையகப்படுத்தும் அவரச சட்டத்தின் மீது பொது விசாரணை நடத்த வேண்டும். நதிநீர் பங்கீட்டில் மாநில அரசுகளுக்கு இடையே உள்ள ஒப்பந்தங்களை மதிக்க வேண்டும் என்று கூறினார்.
பின்னர் சீர்காழி அருகேயுள்ள பழையபாளையம், திருநகரி ஆகிய கிராமங்களில் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜெயராமனுடன் மேதா பட்கர் ஆய்வு மேற்கொண்டார்.
வைகோ - மேதாபட்கர் சந்திப்பு
இதனிடையே தஞ்சை சுற்றுப்பயணத்தில் இருந்த மேதா பட்கர், வழக்கு தொடர்பாக சண்டிகர் செல்வதற்காக இன்று சென்னை விமான நிலையத்துக்கு வந்தார். அவரை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சந்தித்து, மீத்தேன் எரிவாயு திட்டம் குறித்து சுமார் 1 மணி நேரம் பேசினார். மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருவதாகவும் அப்போது வைகோ தெரிவித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications