சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன் கைது: 15 நாள் சிறையில் அடைக்க கோர்ட் உத்தரவு
சென்னை: பழங்கால சிலைகள், ஓவியங்கள் திருடப்பட்ட வழக்கில் மூளையாக செயல்பட்ட ஆந்திர தொழிலதிபர் தீனதயாளனை போலீசார் இன்று கைது செய்தனர்.
சென்னை ஆழ்வார்பேட்டை, முரேஷ் கேட் சாலையில் ஒரு பங்களாவில் ஏராளமான சாமி சிலைகள் பதுக்கிவைக்கப்பட்டு இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள், கடந்த சில நாட்களாக அந்த பங்களாவுக்குள் அதிரடி சோதனை நடத்தினர்.

சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 400 க்கும் மேற்பட்ட பழங்கால சிலைகள், ஓவியங்களை கைப்பற்றப்பட்டன. இந்த விவகாரத்தில், மான்சிங், 58, குமார் 58, ராஜாமணி 60 ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் சிலைகளை வெளிநாடுகளுக்கு கடத்தி செல்லும் ஏஜெண்டுகள் என்பது விசாரணையில் தெரியவந்தது.
வீட்டின் உரிமையாளரும் கடத்தல் கும்பலின் தலைவருமான தீனதயாளன் (78), அங்கிருந்து தப்பி சென்று விட்டார். தீனதயாளனைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இதனிடையே போலீசாரிடம் சரணடைந்த தீனதயாளனிடம் கடந்த 18 நாட்களாக விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று அவர் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து தீனதயாளனை சென்னை எழும்பூர் 2 வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். பின்னர் தீனதயாளனை 15 நாள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஏற்கனவே சிலை கடத்தல் வழக்கில் சினிமா பிரபலங்களுக்கு தொடர்பிருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கடந்தாண்டு சிலை கடத்தல் விவகாரத்தில் பிரபல சினிமா இயக்குநர் சேகர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் தீனதயாளன் கைது செய்யப்பட்டிருப்பதால் இதில் தொடர்புடைய சில சினிமா பிரபலங்கள் குறித்த தகவல்களும் கிடைக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications