நான் இருக்கேன்.. கவலைப்படாதீங்க.. சொல்கிறார் தீபா!
நான் இருக்கேன், கவலைப்படாதீங்க என்று அதிமுகவினருக்குக் கூறியுள்ளார் தீபா
சென்னை: அதிமுகவினர் யாரும் கவலைப்பட வேண்டாம். நான் இருக்கிறேன் என்று மீண்டும் கூறியுள்ளார் தீபா.
ஜெயலலிதா வழியில் நாம் பயணிப்போம். நான் சொன்ன சொல் மாற மாட்டேன். இறுதி வரை அதில் உறுதியாக இருப்பேன் என்றும் தீபா கூறியுள்ளார்.
வழக்கம் போல தனது வீட்டு பால்கனியில் நின்றபடி தன்னைப் பார்க்க வந்தவர்களிடம் பேசினார் தீபா. அவரது பேச்சிலிருந்து:

மக்கள் விரோத ஆட்சி
தமிழகத்தில் யாருமே விரும்பாத மக்கள் விரோத ஆட்சி அமை்துள்ளது. இதை வன்மையாக கண்டிக்கிறேன். ஜெயலலிதா வழியில் நல்லாட்சி மலரச் செய்வோம். தொடர்ந்து பணியாற்றுவோம்.

அரஜாக கூட்டம்
இந்த ஆட்சி அராஜக கூட்டத்திடம் சிக்கியுள்ளது. அதிமுகவையும், மக்களையும் அவர்களிடமிருந்து காப்பாற்றுவோம். அதுதான் நமது ஒரே லட்சியமாக இருக்கும். இதற்காக இணைந்து பணியாற்றுவோம்.

என் கண்கள்
தமிழக மக்களும், தமிழ்நாடும் எனது இரு கண்கள். இதை நான் தொடரந்து சொல்லி வருகிறேன் என் மீது நீங்கள் நம்பிக்கை வைத்துள்ளீர்கள். அதைத் தொடர்ந்து காப்பாற்றுவேன்.

கவலைப்படாதீர்கள்
நாம் தொடர்ந்து ஜெயலலிதாவின் வழியில் பயணிப்போம். நான் சொன்னதை இறுதி வரை காப்பாற்றுவேன். ஜெயலலிதாவின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியவர்களை அந்த இடத்திலிருந்து நீக்க வேண்டும் என்று தீபா கூறினார்.












Click it and Unblock the Notifications