ஏன்டா வரச்சொன்ன எச்சக்கல.. சகோதரன் தீபக்கை பார்த்து நேருக்கு நேர் தீபா வாக்குவாதம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : அவசர அவசரமாக தன்னை போயஸ்கார்டன் வீட்டுக்கு அழைத்தது ஏன் என்று தீபக்கிடம் தீபா கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

எம்ஜிஆர் அம்மா தீபா பேரவைக் கட்சி பொதுச்செயலாளரும், மறைந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகளுமான தீபா இன்று போயஸ் கார்டனுக்கு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தனது சகோதரர் தீபக் அதிகாலை முதலே தொலைபேசியில் தொடர்பு கொண்டு போயஸ் கார்டன் வரச்சொல்லி வற்புறுத்தியதாகவும் அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் தீபா கூறினார்.

ஊடகங்கள் உள்ளே அனுமதிக்கப்படாத நிலையில் காலையில் போயஸ் கார்டன் முன்பு நடந்த காரசார விவாத காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. அந்தக் காட்சிகளில் தீபக் ஏன் திட்டமிட்டு தன்னை வரச்சொன்னார் என்ற காரணம் தெரியாமல் இங்கிருந்து செல்ல மாட்டேன் என்று தீபா வாதிடுகிறார். அப்போது அங்கு வந்த காவல்துறையினர் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்தாமல் செல்லுமாறு கேட்டுக்கொண்டனர்.

 குமுறிய தீபா

குமுறிய தீபா

இந்த பிரச்னைக்கு நடுவே தீபக் அங்கு வந்துவிட, தீபா அவரிடம் நீதானே என்னை வரச்சொன்ன, எல்லார் முன்னாடியும் சொல்லு. ஏன் என்ன வரச்சொன்ன என்று தீபா குமுறுகிறார். அப்போது தீபக் தீபாவை சமாதானம் செய்ய முயல, அதை பொருட்படுத்தாமல் தீபா அங்கேயே நின்றார். இதனையடுத்து அங்கிருந்து தீபக் செல்ல ராஜாவிற்கு ஏன் போன் போட்டாய் என்று கேட்டார்.

 பொய் சொல்லாதே

பொய் சொல்லாதே

ராஜா யாரென்றே தனக்கு தெரியாது என்று தீபக் சொன்னதால் ஆத்திரம் அடைந்த தீபா, பொய் சொல்லாதே, நீ நல்லாவே இருக்க மாட்ட அழிஞ்சுபோய்விடு, நீ கிளம்பு நான் பார்த்துக் கொள்கிறேன் என்று குமுறிவிட்டார் தீபா. இந்த எல்லா களேபரங்கள் போதும் தீபாவின் கணவர் மாதவன் உடனேயே இருந்தார். அந்த ராஜாவை விட்டு விடாதீர்கள் என்று தீபா கூற யாரும்மா ராஜா என்று பரிதாபமாக கேட்கிறார் மாதவன். இந்த காட்சிகளுக்கு நடுவே ராஜா உள்ளே வர தீபக் உன்னை தெரியாது என்று சொல்கிறான், உனக்கு போன் பண்ணினான்ல என்று கேட்கிறார் தீபா.

 மிரட்டல்

மிரட்டல்

சும்மா இல்லாமல் தீபாவின் கணவர் மாதவன் இந்தக் காட்சிகளை மொபைலில் படம்பிடித்துக்கொண்டிருக்க, போனை ஆஃப் பண்ணுடா என்று ராஜா மாதவனை மிரட்டுகிறார். இதையடுத்து தீபா அவரை ஏன் மிரட்டுகிறாய், தீபக் தானே அழைத்தான் அவன் இல்லை என்று சொல்கிறான் அவனிடம் போய் கேள் என்று சொல்கிறார்.

 முகத்துல முழிக்காத

முகத்துல முழிக்காத

இதற்கு மத்தியில் மீண்டும் தீபக் அங்கு வர, ராஜா யாரென்று தெரியாதா, அவர பார்த்து சொல்லு என்று கேட்கிறார் தீபா. ராஜாவும் தீபக்கிடம் ஏன் அப்படி சொன்னாய் என்று கேட்க மன்னிச்சுடுங்க என்று சொல்லி காரில் ஏறி எஸ்கேப் ஆனார் தீபக். எங்களையெல்லாம் பிரச்னையில் மாட்டிவிட்டு நீ மட்டும் தப்பிச்சுக்கிறியா. எச்சக்கல, இனி நீ என் முகத்துலயே முழிக்காத என்று வசைபாடி தீர்த்து விட்டார் தீபா.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Deepa had a severe argument with her brother Deepak at Poesgarden and also cursed him not to talk with her hereafter
Please Wait while comments are loading...