அதே நுனிநாக்கு ஆங்கிலம்.. எம்.ஜி.ஆர் பாடலுடன் உரை.. ஜெயலலிதாவாகவே மாறிப்போன தீபா
தி.நகரிலுள்ள தனது இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் மகளான தீபா.ஜெயலலிதாவை போலவே எம்ஜிஆரின் சினிமா பாடல் வரிகளையும் 'உரையின்போது' மேற்கோள் காட்டினார்.
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை போன்றே எம்.ஜி.ஆரை மேற்கோள் காண்பித்து பிரஸ் மீட் செய்தார் அவரது அண்ணன் மகள் தீபா.
சென்னை, தி.நகரிலுள்ள தனது இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் மகளான தீபா. முன்னதாக அவர் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியிருந்தார்.

தீபா அரசியலில் குதிப்பது குறித்து அறிவிப்பு வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டதால் ஏராளமான பத்திரிகையாளர்கள் அவரது வீட்டில் குவிந்திருந்தனர். ஆனால் தீபாவோ, நான் முதல் முதலாக உரையாற்றப்போகிறேன் என கூறியபடி மைக்கை பிடித்து பத்திரிகையாளர்களுக்கு 'ஜெர்க்' ஏற்படுத்தினார்.
இதையடுத்து மேடையில் உரையாற்றுவதை போன்ற தோரணையுடன்தான் பேச்சை ஆரம்பித்தார். பேச்சின்போது, ஜெயலலிதாவை போன்றே சில இடங்களில் அழுத்தமாக சத்தமாக பேசினார். பிற இடங்களில் சாதாரணமாக பேசினார். குறிப்புகளை ஒரு காகிதத்தில் எழுதி அதை பார்த்துவாசித்தார்.
ஜெயலலிதாவை போலவே எம்ஜிஆரின் சினிமா பாடல் வரிகளையும் 'உரையின்போது' மேற்கோள் காட்டினார். "மண் குடிசை வாசல் என்றால் தென்றல் வர வெறுத்திடுமா, மாலை நிலா ஏழை என்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா" என பாடி ஏழை பங்காளனாக வாழ்ந்த மக்கள் தலைவர் எம்ஜிஆர் நூற்றாண்டு பிறந்த நாளான இந்த நன்னாளில் என் வாழ்க்கையின் புது அத்தியாயத்தை தொடங்க உள்ளேன் என தீபா தெரிவித்தார். ஜெயலலிதா போலவே ஆடை மற்றும் அலங்காரமும் செய்திருந்தார் தீபா.
நிருபர்களின் ஆங்கில கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் சரளமாக பதிலளித்தார் தீபா. அப்போது அவரது உச்சரிப்பு ஸ்டைல் பக்காவாக ஜெயலலிதாவை போன்றே காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்ற திருமாவளவன்.. காரணம் இதுதானாம்! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்!












Click it and Unblock the Notifications