ஓபிஎஸ் பாணியில் ஜெ., சமாதியில் தியானத்தில் அமர்ந்த தீபா

ஜெயலலிதா நினைவிடத்தில் தனது கணவருடன் தீபா தியானத்தில் அமர்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் தனது கணவர் மாதவனுடன் தீபா மவுன அஞ்சலி செலுத்தினார். அவருடன் தோழி அவரது கணவரும் அமர்ந்தது தியானம் செய்தனர். ஓ.பன்னீர் செல்வம் பாணியில் தீபாவும் தியான போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை தொடங்கி கட்சி கொடியை அறிமுகம் செய்து வைத்தார். பேரவை நிர்வாகிகளையும் அறிமுகம் செய்தார். கடந்த சில நாட்களாகவே அவரது குடும்பத்தில் புயல் வீசுவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்தார் தீபா.

Deepa does a OPS in Jaya samathi

அரசியலை விட்டு பலரும் தன்னை விரட்ட நினைப்பதாக குற்றம் சாட்டி வந்த தீபா இன்று திடீரென ஜெயலலிதா நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தினார். திடீரென கணவர், தோழியுடன் தியானத்தில் அமர்ந்தார். 45 நிமிடம் அவர் தியானத்தில் ஈடுபட்டார். பேரவை உறுப்பினர்களின் பெயர் பட்டியலை வைத்து வணங்கினார்.

Deepa does a OPS in Jaya samathi

கடந்த பிப்ரவரி 7ஆம் தேதியன்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஜெயலலிதா நினைவிடத்தில் அமர்ந்து தியானம் செய்தார். இதனால் மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்பட்டது. அம்மாவின் ஆன்மா பேசுவதாகவும் கூறினார். இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வம் பாணியில் ஜெயலலதாவின் அண்ணன் மகள் தீபாவும் இன்று தனது கணவருடன் தியானத்தில் அமர்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வம் பாணியில் ஜெயலலதாவின் அண்ணன் மகள் தீபாவும் இன்று தனது கணவருடன் தியானத்தில் அமர்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+