கணவரின் தாயை இழிவுபடுத்தி அசிங்கமாக திட்டிய டிரைவர் ராஜா.. அவ்ளோ அமைதியுடன் தீபா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: போயஸ் கார்டன் வாசலில் தீபாவுடன் நின்று கொண்டிருந்த மாதவனை, அசிங்கமான கெட்ட வார்த்தை சொல்லி திட்டினார் தீபாவின் கார் டிரைவர் ராஜா. ஆனால் அதை கடுமையாக கண்டிக்காமல், ராஜாவுக்கு வலிக்காதது போல கண்டித்த தீபாவின் செயல் புருவம் உயர்த்த வைத்துள்ளது.

ஜெயலலிதாவின் ரத்த சொந்தங்கள் என்று கூறிக்கொண்டு போயஸ்கார்டனுக்கு வந்தார் தீபா. ஜெயலலிதாவிற்கு பூஜை செய்ய வேண்டும் என்று தீபக் வரச்சொன்னதால்தான் வந்தேன் என்று கூறினார் தீபா. போயஸ்கார்டன் வீட்டிற்குள் அனுமதிக்க மறுக்கவே களேபரமானது.

சற்று நேரத்தில் மாதவனும் வரவே கச்சேரி களைகட்டியது. போயஸ்கார்டன் வீட்டை அபகரிக்கும் நோக்கத்தோடு வந்திருக்கிறார் தீபா என்று அதிமுகவின் அம்மா அணியினர் குற்றம் சாட்டினர். அது உண்மைதானே என்று மக்கள் யோசிக்கும் அளவிற்கு இருந்தது தீபக்கைப் பார்த்து தீபா திட்டியது.

டேய் என்னடா நீ

டேய் என்னடா நீ

போயஸ்கார்டன் வாசலில் தீபா பேட்டி கொடுத்த போது ஒருபக்கம் மாதவன், மற்றொரு பக்கம் டிரைவர் ராஜா நின்று கொண்டிருந்தார். கண்ணீருடன் பேட்டி கொடுத்தார் தீபா. பின்னர் காரில் ஏற வந்த அவரை தீபா கண்டபடி திட்டினார். அப்போது மாதவனைப் பார்த்து கையை உயர்த்தினார் தீபக். அதற்கு தீபா, டேய்... என்னடா நீ மாதவனை பார்த்து கையை நீட்டுற என்று கேட்டு திட்டினார்.

டென்ஷன் ஆன ராஜா

டென்ஷன் ஆன ராஜா

போலீசார் சமாதானப்படுத்தினர். அப்போது மாதவனை ஒருமையில் பேசிய போலீசை பார்த்து மிரட்டிய தீபா, என்னோட புருஷனை எப்படி நீ அப்படி சொல்லலாம் என்று கேட்டார். மாதவனின் பக்கம் தீபா செல்வதைப் பார்த்த டிரைவர் ராஜா டென்ஷனாகி விட்டார். தீபாவை காரில் ஏறு என்று ஒருமையில் சொன்னார்.

நீ போ ராஜா

நீ போ ராஜா

அதற்கு தீபா செல்லவில்லை. நீ போ... நான் சொல்றதை நீ கேளு என்று சண்டை போட்டார். தன்னுடைய கணவர் மாதவனின் அருகிலேயே நின்று கொண்டிருந்தார். இதையெல்லாம் மாதவன் தனது செல்போனில் படம் பிடித்தார். இதைப் பார்த்த டிரைவர் ராஜா, கெட்ட வார்த்தைகளினால் மாதவனை திட்டினார். டேய்... பணத்தை திருட்டிட்டு ஓடின நாய் நீ எதுக்கு இங்க வந்தே... செல்போன்ல ஏன் வீடியோ எடுக்கிற என்று கூறி ஆபாசமாக திட்டினார்.

அம்மாவை இழிவுபடுத்தித் திட்டிய ராஜா

அம்மாவை இழிவுபடுத்தித் திட்டிய ராஜா

ஊரே கூடி இதை வேடிக்கை பார்த்தது.. ஆஹா.. இது இவர்களோடு குடும்பச் சண்டை போல இருக்கே என்று அசிங்கமாக பார்த்தனர். அதற்கு தீபா, ஏய் ராஜா, நீ தேவையில்லாம பேசாதே என்று மென்மையாக கண்டித்தார். அதாவது ராஜாவுக்கு வலிக்காதது போல கண்டித்தார். புருஷனை அசிங்கமாக ஒருவன் கெட்ட வார்த்தையால் திட்டுகிறான். மனைவி இப்படியா அமைதியாக கோபப்படுவார் என்று நினைக்கும் அளவுக்கு அவரது "திட்டல்" இருந்தது.

அமைதியாக கொந்தளித்த மாதவன்

அமைதியாக கொந்தளித்த மாதவன்

மாதவனும் கூட தனது தாயை இழிவுபடுத்திப் பேசும் அந்த வார்த்தையைக் கேட்டு ரொம்பவும் கொந்தளிக்கவில்லை. போடா போடா என்று சாதாரணமாகவே கோபப்பட்டார். மேலும் தீபாவைப் பார்த்து நான் போகவா? நீ சொல்லித்தானே நான் இங்கே வந்தேன் என்று கேட்டார்.

தீபக் பரவாயில்லையே

தீபக் பரவாயில்லையே

போயஸ்கார்டன் வாசலில் தீபா, மாதவன், டிரைவர் ராஜா என்று நான்கு பேருமே முட்டி மோதியது பரபரப்பை ஏற்படுத்தியது. தீபக் பரவாயில்லையே, டீசன்ட்டாக வந்தார் கூப்பிட்டார் போனார். ஆனால் இந்த ராஜா, தீபா செயல் படு கேவலமாக இருக்கிறதே என்று நினைக்கும் அளவுக்கு இருவரும் நேற்று நடந்து கொண்டனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Deepa driver Raja had argument with Madhavan at Poesgarden on Sunday.
Please Wait while comments are loading...