என்ன பழக்கம் இது... ராத்திரி ராத்திரி போய் சமாதில தியானம் பண்ற பழக்கம்!
சென்னை: அதிமுக அரசியல்வாதிகளுக்கு திடீர் வியாதி வந்துள்ளது. அது ஜெயலலிதா சமாதியில் போய் ஓங்கி அடிப்பது, ராத்திரி ராத்திரி போய் தியானம் செய்வது. முன்பு ஓ.பி.எஸ். தியானம் செய்தார். அந்த வரிசையில் இன்று தீபா தியானம் செய்துள்ளார்.
எல்லாத்துக்கும் ஆமாம் சாமி போட்டு வந்த ஓ.பி.எஸ். திடீரென ஒரு நாள் சசிகலாவுக்கு எதிராக வெகுண்டெழுந்தார். மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதியில் போய் தியானத்தில் அமர்ந்தார். தியானம் கலைந்து எழுந்து வந்த அவர் பரபரப்பு பேட்டி கொடுத்தார். அதிமுகவை உடைத்தார்.

அன்று தொடங்கிய பிரளயத்தால் தமிழ்நாடு பல நாட்களுக்கு தூக்கம் தொலைத்தது. இந்த நிலையில் இன்று திடீரென தீபாவும் போய் ஜெயலலிதா சமாதியில் உட்கார்ந்தார். அவரது கணவருடன் போய் தியானம் செய்த அவரால் திடீர் சலசலப்பு ஏற்பட்டது.
என்ன விசேஷம் என்றால் ஓபிஎஸ்ஸும் சரி, தீபாவும் சரி இரவில்தான் ஜெயலலிதா சமாதிக்குப் போய் தியானம் செய்தனர். அது ஏன் இரவை இவர்கள் தேர்ந்தெடுத்தார்கள் என்பதுதான் புரியவில்லை. சாப்பிட்டு விட்டு எல்லோரும் தூங்கப் போகும் சமயம் பார்த்து இவர்கள் தியானத்தில் உட்கார்ந்ததுதான் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இப்படித்தான் முன்பு சசிகலா, ஜெயிலுக்குப் போவதற்கு முன்பு சமாதிக்கு விசிட் அடித்து ஓங்கி ஓங்கி 3 முறை சமாதியில் அடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். ஓ.பி.எஸ் தீபா போன்றோர் இரவில் சமாதிக்குப் போகிறார்கள்.
இப்படி அதிமுக தரப்பினரைப் பிடித்துள்ள இந்த தியான வியாதி எப்போது தீரும் என்று தெரியவில்லை. அடுத்து யார் தியானம் செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications