ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்ய தீபாவிற்கு அருகதையில்லை - வைகைச்செல்வன்
ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்வதற்கு தீபாவிற்கு தகுதியில்லை என்று அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச் செல்வன் கூறியுள்ளார்.
சென்னை: கொலைமிரட்டல் வருவதாக பொய்யான புகார்களைக் கூறும் தீபாவிற்கு ஜெயலலிதா நினைவிடத்தில் தியானம் செய்ய அருகதையில்லை என்று கூறியுள்ளார். தன்னை மிரட்டியவர்கள் யார் என்று அவர் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
ராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வைகைச் செல்வன், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் வருவதற்கான தகுதியை தீபா இழந்து விட்டார்.

அதிமுக நிர்வாகிகள் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் கூறுவதை தீபா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வைகைச் செல்வன் கூறினார்.
அவரதுக்கு கொலைமிரட்டல் வந்து உண்மை என்றால், தன்னை மிரட்டியவர்கள் யார் என தீபா வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்று கூறிய அவர், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் என்ற முறையில் தீபா மீது அதிமுகவினர் அதிக மரியாதை வைத்திருப்பதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ஆர்கே நகரில் அதிமுகதான் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடும். அதேப் போல இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறும் என்றும் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications
