தீபா பேரவையை விட்டு விலகினார் "மேடி"... நிர்வாகிகள் நியமன சர்ச்சை எதிரொலி!
நிர்வாகிகள் நியமனத்தில் மனைவியுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் தீபாவின் கணவர் மாதவன், தனக்கும் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அறிவித்துள்ளார்.
சென்னை: எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை நிர்வாகிகள் நியமனத்தில் ஏற்பட்ட சர்ச்சையினால் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் கணவர் மாதவன் பேரவையில் இருந்து விலகியுள்ளார். தனக்கும் பேரவைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அறிவித்துள்ளார்.
ஜெயலலிதா உடல்நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த போது சந்திக்க வந்தார் தீபா அவரை பார்க்க விடவில்லை என்று கூறி ஊடகங்களில் புகார் தெரிவித்தார். ஜெயலலிதா மரணத்தின் போது பிரச்சினைக்கு இடையே அஞ்சலி செலுத்தினார்.
சசிகலாவை பிடிக்காத தொண்டர்கள் தீபாவை நோக்கி திரும்பினர். இதனால் அரசியலுக்கு வரப்போவதாக கூறிய தீபா, எம்ஜிஆர் பிறந்தநாளில் தனது அரசியல் பயணத்தை அறிவித்தார்.

திசை மாறிய காற்று
ஓபிஎஸ் ராஜினாமாவிற்குப் பின்னர் அவரது திடீர் மனமாற்றம் தமிழக அரசியலின் போக்கை மாற்றியது. அவருக்கு ஆதரவாளர்கள் வட்டம் அதிகரித்தது. இதனையடுத்து தீபாவும் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்தார். இருவரும் இணைந்து செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

பேரவை தொடங்கிய தீபா
ஓபிஎஸ் தலைமையை ஏற்காத தீபா, பிப்ரவரி 24ஆம் தேதியன்று ஜெயலலிதா பிறந்தநாளில் பேரவை தொடங்கினார். எம்ஜிஆர் ஜெயலலிதா தீபா பேரவை என்று பெயர் வைத்தார். நிர்வாகிகள் நியமித்தார் இதில்தான் சிக்கல் உருவானது. தன்னுடன் இருக்கும் ராஜா - சரண்யாவை முக்கிய பொறுப்பில் நியமிக்கவே கடும் எதிர்ப்பு கிளம்பியது.

ரகசிய கூட்டம்
செய்தியாளர்கள் வெளிப்படையாக சந்தித்து வந்த தீபா வளசரவாக்கத்தில் நிர்வாகிகளுடன் ரகசிய கூட்டம் நடத்தினார். தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களை நான்கு மண்டலங்களாக பிரித்து 32 பொருட்பாளர்களை நியமனம் செய்து உள்ளனராம்.

கணவருக்கு தெரியாது?
நிர்வாகிகள் நியமனத்தில் கணவர் மாதவனுடன் தீபா கலந்து பேசவில்லையாம். இதனால் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உண்மை தொண்டர்களுக்கு பொறுப்பு அளிக்காமல் பணத்தை வாங்கிக்கொண்டு பொறுப்பு அளிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. நிர்வாகிகள் நியமனத்தில் தீபாவிற்கும் அவரது கணவருக்கும் இடையே பிரச்சினை எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

கணவர் விலகல்
இது குறித்து கருத்து கூறியுள்ள தீபாவின் கணவர் மாதவன், கடந்த 3 மாதமாக நான் தீபா உடன் இருந்து தொண்டர்களின் விருப்பப்படி செயல்பட்டேன். இருவரும் இணைந்து நல்ல முடிவு எடுத்துவந்தோம். ஆனால் தற்போது அந்த நிலைமை மாறிவிட்டது.

எனக்கு தெரியாது
ஓ.பன்னீர்செல்வத்தை தீபா சந்தித்தது, பேரவையை தொடங்கியது, பொறுப்பாளர்கள் பட்டியல் வெளியிட்டது எதுவுமே எனக்கு தெரியாது. இவை அனைத்துமே தீபாவின் தனிப்பட்ட செயல்பாடுகள். பேரவை தொடங்கியபோது தீபாவுக்காகவே அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன்.

எந்த தொடர்பும் இல்லை
பொறுப்பாளர்கள் பட்டியலில் ஒருவரை கூட எனக்கு தெரியாது. தீபா தனித்து செயல்பட விரும்புகிறார். அவர் தனித்து செயல்பட்டாலும், சிறப்பாக செயல்படுகிறார். நான் இனி பேரவை சம்பந்தமான நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டேன். எனக்கும், பேரவைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. தீபா நல்ல நிலைமைக்கு வரவேண்டும் என்பதே எனது விருப்பம் என்று கூறியுள்ளார்.

யார் பிடியில் தீபா
இதனிடையே தீபாவை தினசரி சந்தித்து வரும் தொண்டர்களோ? தீபாவைச்சுற்றி இருக்கும் கும்பல் அவரை ஆட்டிவைப்பதாக கூறி வருகின்றனர். நாங்கள் தீபா பேரவையில் இருக்கிறோமா? இல்லையா என்ற நிலையில் தவிக்கிறோம். ஜெயலலிதாவைப் போல தீபாவும் ஒரு கும்பலின் பிடியில் சிக்கியுள்ளார் என்று புலம்புகின்றனர் ஜெயலலிதா விசுவாசிகள். என்னதான் நடக்கிறது தீபா விளக்குவாரா?
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications