அரசியல் சிஸ்டம் பற்றி பேசுவதற்கு ரஜினிக்கு தகுதி உண்டா? தீபா ஆவேசம்
அரசியல் சிஸ்டம் சரியில்லை என்று ரஜினி பேசுவதற்கு முதலில் தகுதி உண்டா? ஏனெனில் ரஜினிகாந்த் முழுக்க முழுக்க திரைப்படத்துறை சிஸ்டத்தில் இருப்பவர் என்று எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச் செயலாளர்.
சென்னை: அரசியல் சிஸ்டம் சரியில்லை என்று ரஜினி பேசுவதற்கு முதலில் தகுதி உண்டா? ஏனெனில் ரஜினிகாந்த் முழுக்க முழுக்க திரைப்படத்துறை சிஸ்டத்தில் இருப்பவர் என்று எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச் செயலாளர் தீபா கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்கள் முன்னிலையில், தமிழக அரசியல் நிர்வாகம் சீர்கெட்டுள்ளது. மொத்தத்தையும் சரிசெய்தால்தான் தமிழகம் உருப்படும் என்று கூறியிருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

இந்நிலையில் அரசியல் சிஸ்டம் சரியில்லை என்று ரஜினி பேசுவதற்கு முதலில் தகுதி உண்டா? என எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச் செயலாளர் தீபா கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்னிந்தியா திரைப்பட நடிகர் சங்கத்தில் 3000 பேர் உள்ளார்கள். அதிலே 3000 பிரச்சனைகள் உள்ளது. அந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கு அந்த சிஸ்டத்தை ஒழுங்குபடுத்த ரஜினிகாந்த் முயற்சி செய்தாரா? தமிழக அரசியல் சிஸ்டத்தை தந்தை பெரியார் வழியில் அறிஞர் அண்ணா காட்டிய ஆட்சி நிர்வாக தன்மையை பாடமாக ஏற்று எம்ஜிஆரும், அம்மா காட்டிய நிர்வாக திறமையை சரிசெய்ய எங்களைப் போன்றவர்கள் திராவிட இயக்க அரிமாக்களாக தயாராக உள்ளனர்.
தமிழ்மொழியைப் பற்றியும், தமிழினத்தைப் பற்றியும் துளியும் அக்கறை கொள்ளாத ரஜினிகாந்த் போன்றவர்கள் அரசியல் சிஸ்டத்தை பற்றி பேசுவதை ஏற்றறுக்கொள்ள முடியல்லை. மேலும், காவேரி பிரச்சனையில் ரஜினிகாந்த் நிலைபாட்டை தெளிவுபடுத்த தயாராக உள்ளரா? நீட் தேர்வுக்கு அறிக்கைவிடாதது ஏன்? இந்தி எதிர்ப்பு குறித்து பேசதயாரா?
ஈழத்தமிழர் பிரச்சனை பற்றி வாயை திறக்காதது ஏன்? ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றி ரஜினி அறிவாரா? அரசியல் களம் என்பது போர்க்களம் ஆகும். ரஜினி தேர்தல் களத்தை மட்டும் கருத்தில் கொண்டு போருக்கு தயார் என்று பேசுவதை நாட்டு மக்கள் அங்கீகரிக்கவில்லை. திராவிட இயக்க மண் எளிதில் யாரிடமும் ஏமாறாது, ஏமாற்றவும் முடியாது, ரஜினி அரசியல் களம் குறித்து எனக்கு தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு இல்லை, தமிழ் மக்கள் உணர்வுகளை கண்ணாடியாக
பிரதிபளித்து மக்களின் வேண்டுகளுக்காக இந்த அறிக்கையின் மூலம் மக்கள் விருப்பத்தை வெளியிடுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications