‘மக்களுக்காகவே உழைப்பேன்’.. ஜெயலலிதா பாணியில் ஆர்.கே. நகரில் ஆவேசமாக பேசிய தீபா
‘மக்களுக்காகவே நான்’ என்று முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா ஆவேசமாக சொல்வது போன்றே அவரது அண்ணன் மகளான தீபாவும் ‘மக்களுக்காகவே உழைப்பேன்’ என்று ஆர்.கே. நகர் பொதுக் கூட்டத்தில் ஆவேசமாக பேசினார்.
சென்னை: ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா போட்டியிடுகிறார்.
அவருக்கு படகு சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இதனை மக்களிடம் அறிமுகம் செய்து தேர்தல் அறிக்கையை நேற்று தீபா வெளியிட்டார். முதல் முறையாக ஆர்.கே. நகர் பொதுக் கூட்டத்தில் பேசிய தீபா, தனது அத்தையான ஜெயலலிதா பேசுவது போன்றே ஆவேசமாக பேசினார். குறிப்பாக 'மக்களுக்காகவே நான்' என்று ஜெயலலிதா ஆவேசமாக கூறுவது போன்றே தீபாவும் மேடையில் பேசி வாக்காளர்களை கவரும் முயற்சியில் ஈடுபட்டார்.

மேலும் அவர், "நீங்கள் பெற்றெடுக்காத குழந்தை நான். உங்களுக்காக இங்கு நின்று கொண்டிருக்கிறேன். உங்களின் ஒருத்தராய், உங்கள் முன்னேற்றத்தில் அக்கறையோடு இவ்வுயிர் மூச்சு உள்ளவரை மக்களுக்காகவே உழைப்பேன். எந்த சக்தியாலும் என்னை உங்களிடம் இருந்து பிரிக்க முடியாது" என்று கூறினார்.
பொதுக் கூட்டத்தில் மறக்காமல் சசிகலா தரப்பை போட்டுத் தாக்கிய தீபா, "துரோக கும்பலின் முகத்திரையை கிழிப்பேன். அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தருவேன்" என்று சூளுரைத்தார். முதல் முறையாக பொதுக் கூட்டத்தில் தீபா பேசியதால் தொடர்ந்து அவரால் பேச முடியவில்லை. வெறும் 5 நிமிடங்கள் மட்டுமே பேசி கூட்டத்தை முடித்துக் கொண்டார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications