ஜெ. பிறந்த நாளில் பேரவை தொடங்குகிறார் தீபா.. கொடியும் இன்று அறிமுகம்
ஜெயலலிதா பிறந்த நாளான இன்று அவரது அண்ணன் மகள் தீபா, பேரவை ஒன்றை தொடங்க உள்ளார். அதன் பெயர் மற்றும் கொடியை இன்று மாலை அறிமுகம் செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜெயலலிதாவின் பிறந்த நாளில் அமைப்பு தொடங்குவது குறித்த அறிவிப்பை வெளியிடுவேன் என்று அவரது அண்ணன் மகள் தீபா ஏற்கனவே சொல்லியிருந்தார். அதன்படி இன்று பேரவை ஒன்றை தொடங்க இருக்கிறார்.
இது குறித்து அவர் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இன்று ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை தீபா செய்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக இன்று மாலை அவர் புதியதாக தொடங்க உள்ள பேரவையின் பெயரை வெளியிட உள்ளார். மேலும், பேரவையின் கொடியையும் அவர் வெளியிடுவதாக செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மறைந்ததில் இருந்து தீபாவிற்கு ஆதரவு பெருகி வந்தது. அன்றாடம் அவரது வீட்டு வாசலில் சசிகலாவின் தலைமையை ஏற்காத அதிமுக தொண்டர்கள் திரண்டு வந்தனர். இதனையடுத்து, அரசியலில் தான் இறங்கப் போவதாகவும், ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ம் தேதி அது குறித்த அறிவிப்பை வெளியிடப் போவதாகவும் தீபா அறிவித்திருந்தார்.
அதன் தொடர்ச்சியாக பேரவை தொடக்கத்திற்காக அறிவிப்பை தீபா வெளியிட்டுள்ளார். முன்னதாக, ஓபிஎஸ்ஸுடன் இணைந்து செயல்படப் போவதாகவும் அவர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு












Click it and Unblock the Notifications