ஆர்.கே.நகரில் எப்போது தேர்தல் நடந்தாலும் நான்தான் வெற்றி பெறுவேன் - தீபா நம்பிக்கை
ஆர்.கே.நகரில் ஜனநாயகப்படி தேர்தல் நடந்தால் அதிக ஓட்டுக்கள் வித்தியாசத்தில் நான் வெற்றி பெறுவேன் என்று தீபா கூறியுள்ளார்.
சென்னை: தேர்தல் ஆணையத்தால் ரத்து செய்யப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் எப்போது நடந்தாலும் அங்கு போட்டியிட்டு நானே வெற்றி பெறுவேன் என்று ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா கூறியுள்ளார்.
ஆர்கே.நகர் தொகுதிக்கு வரும் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் தங்களின் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தன. இதனிடையே அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு உட்பட 35க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தினர். இதில் 89 கோடி ரூபாய் வரை ஆர்.கே. நகரில் செலவு செய்ததற்கான ஆவணம் சிக்கியதாக கூறப்பட்டது.

இதையடுத்து ஆலோசனை நடத்திய தேர்தல் ஆணையம் நேற்று நள்ளிரவு தேர்தலை ரத்து செய்வதாக அறிவித்தது. இந்நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறித்து எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை வேட்பாளர் தீபா கூறுகையில், ஜனநாயகம் காக்கப்பட பணப்பட்டுவாடா செய்தவர்களை தேர்தலில் போட்டியிட தகுதி நீக்கம் செய்து 6 ஆண்டுகள் தடை விதிக்க வேண்டும். தோல்வி பயத்தால் தினகரன் ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா செய்துள்ளார். உழல் வழக்கில் சிக்கிய தினகரன் வேட்புமனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்திருக்க வேண்டும்.
பணப்பட்டுவாடா உண்மை என்பதை கண்டறிந்து தேர்தலை ரத்து செய்ததை வரவேற்கிறேன். ஜனநாயகப்படி தேர்தல் நடந்தால் அதிக ஓட்டுக்கள் வித்தியாசத்தில் நான் வெற்றி பெறுவேன். இவ்வாறு அவர் கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications