For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முதல்வர் ஓபிஎஸ் வீட்டிற்கு சென்ற தீபா - குடும்பத்தினர் ஆரத்தி எடுத்து வரவேற்பு

முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வீட்டிற்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா சென்றுள்ளார். அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் வீட்டிற்கு சென்றார். அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

சசிகலாவின் தலைமையை ஏற்காத அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிற்கு ஆதரவு அளித்தனர். அரசியலுக்கு வர அழைப்பு விடுத்தனர். அவரும் ஒவ்வொரு முறையும் விரைவில் அரசியல் பயணத்தை தொடங்குவேன் என்று கூறி வந்தார்.

Deepa visits OPS house

பிப்ரவரி 5ஆம் தேதி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ஓ.பன்னீர் செல்வம். பிப்ரவரி 7ஆம் தேதியன்று ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று தியானம் செய்தார் ஒ.பன்னீர் செல்வம் இதனால் கட்சி இரண்டாக பிளவு பட்டது. தினசரியும் அவரது ஆதரவாளர்கள் சென்று தங்களின் ஆதரவை பதிவு செய்து வருகின்றனர்.

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அரசியலுக்கு வரவேண்டும் என்றும் ஓ.பன்னீர் செல்வம் அழைப்பு விடுத்தார். அதற்கு தீபா நன்றி தெரிவித்தார். பிப்ரவரி 24ஆம் தேதியன்று தனது அரசியல் பிரவேசம் பற்றி அறிவிப்பேன் என்று கூறினார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவிற்கு 4 ஆண்டு கால சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இது சசிகலாவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஒருவாரம் கழித்து மீண்டும் இன்று மெரீனா கடற்கரையில் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்றார். ஓ.பன்னீர் செல்வம்.

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் அதே நேரத்தில் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்றார். அப்போது அவர் தனது ஆதரவை தெரிவித்தார். முதல்வருடன் இணைந்து ஒன்றாக அதிமுகவின் இரு கரங்களாக செயல்படுவோம் என்று தீபா கூறினார்.

இதனைத் தொடர்ந்து இருவரும் இணைந்து கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்திற்கு சென்றனர். முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வீட்டிற்கு சென்ற தீபாவிற்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.

English summary
Jayalalithaa's niece Deepa Jayakumar joins O Panneerselvam camp, says her political journey begins today. She Visited OPS house.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X