தீபாவளி பண்டிகை: 5 நாள் கொண்டாட்டம் - எந்த நாளில் என்ன செய்யலாம்?

Subscribe to Oneindia Tamil

-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர் சுப்ரமணியன்

சென்னை: தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கோலகலமாக கொண்டாடப்படக் கூடிய பண்டிகையாகும். தென்னிந்தியாவில் நரகாசுரனை வதம் செய்த வகையில் தீபாவளி கொண்டாடப்படுகிறது. பொதுவாக தீபாவளி திருநாள் என்பது தாய் (பூமாதேவியின் அம்சமான சத்யபாமா) மகனை (நரகாசுரனை) வதம் செய்த தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

வட இந்தியாவில் இராமர் சீதையுடன் பட்டாபிஷேகம் செய்து கொண்ட நாள் என்றும் பாண்டவர்கள் வனவாசம் முடிந்து நாடு திரும்பிய நாள் எனவும் தீபாவளியாகக் கொண்டாடப்படுகிறது. வட இந்திய வணிகர்கள் தீபாவளி அன்று தான் லட்சுமி பூஜை செய்து புது கணக்கு போடுவது வழக்கம்.

Deepavali five-day celebration in India

தீபாவளி என்பதை தீப + ஆவளி - தீபங்களின் வரிசை என்றும் பொருள் கொள்ளலாம். நாம் வாழ்நாள் முழுவதும் செல்வச் செழிப்புடன் விளங்குவதற்கு தீப ஒளியை மகாலட்சுமியாக பாவித்து வணங்குவதே தீபாவளியின் முக்கிய அம்சமாகும்.

5 நாட்கள் பண்டிகை

தீபாவளி திருநாள் என்பது ஐந்து நாட்கள் கொண்டாடப்பட வேண்டிய திருநாளாகும். இதில் முக்கிய அம்சமாக நரக சதுர்த்தசி விளங்குகிறது. தீபாவளி பண்டிகையின் போது விஷ்ணு, லட்சுமி, குபேரன், இந்திரன், சிவன், சக்தி, முருகன், எமன் ஆகிய தெய்வங்களை வழிபடுகிறோம்.

எந்த நாளில் என்ன செய்யலாம்

முதல் நாள் : திரயோதசி அன்று தனத் திரயோதசி மற்றும் யமதீபம்.
இரண்டாம் நாள் : சதுர்தசி அன்று நரக சதுர்தசி - தீபாவளி திருநாள்.
மூன்றாம் நாள் : அமாவாசை அன்று கேதார கௌரி விரதம்.
நான்காம் நாள் : பிரதமை அன்று கார்த்தீக ஸ்நானம், கந்த சஷ்டி.
ஐந்தாம் நாள் : துவிதியை அன்று யமத் துவிதியை.
கோவத்ச துவாதசி : 26-10-2016 புதன் கிழமை
இன்று தாய் மகனைக் கொன்ற தோஷம் நீங்குவதற்க்காக பசுவையும் கன்று குட்டியையும் சேர்த்து வழிபட வேண்டும்.

தன்வந்திரி ஜெயந்தி

28-10-2016 வெள்ளி கிழமை இன்று பகல் 01-12 மணிக்கு மேல் 03-36 மணிக்குள் திரயோதசி இருக்கும் காலத்தில் பகவான் தன்வந்திரி தோன்றினார். இன்று தன்வந்திரி பகவானுக்காக பூஜைகள் ஹோமங்கள் செய்வது நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமாக வாழ வழி வகுக்கும்.

தங்கம் வாங்கலாம்

தனத்திரயோதசி : இன்று தங்கம் வாங்குவது சிறப்பு. இன்று தீபாவளிக்கு வேண்டிய துணிமணிகளையும் வீட்டுக்கு தேவையான பொருட்களையும் தங்கத்தையும் வாங்கி தீபாவளி அன்று மாலை லட்சுமி குபேர பூஜை செய்தால் வீட்டில் மென்மேலும் தங்கம் சேரும்.

யமதீபம்

இன்று சூரிய அஸ்தமனத்திற்கு முன் வீட்டிற்கு வெளியில் தெற்கு நோக்கி வீட்டில் உள்ள நபர்களின் எண்ணிக்கைக்குத் தக்கவாறு தீபம் ஏற்றி வைக்க வேண்டும். இதனால் நோய்கள் நீங்கும் மருத்துவச் செலவுகள் குறையும்.

தீபாவளி பண்டிகை

நரக சதுர்த்தசி : 29-10-2016 சனி கிழமை இன்று அதிகாலை 03-00 மணி முதல் 06-00 மணிக்குள் கங்காஸ்நானம் எண்ணெய் குளியல் செய்வது சிறப்பு. இன்று எண்ணெயில் லட்சுமிதேவியும் வெண்ணீரில் கங்கா தேவியும் இருப்பதாக ஐதீகம். இன்று பகலில் யம தர்ப்பணம் செய்வதால் முன்னோர்கள் திருதியடைவார்கள்.
இன்று மாலை 05-00 மணி முதல் 06-00 மணிக்குள் தீபம் ஏற்றி லட்சுமி குபேர பூஜை செய்ய வேண்டும்.

கேதார கௌரி விரதம்

30-10-2016 ஞாயிறு கிழமை சிவபெருமானுக்கு கேதாரேஸ்வரர் என்று பெயர் உண்டு. கௌரி என்னும் பார்வதி தேவியுடன் கேதாரேஸ்வரரை பூஜை செய்து நோன்பு அனுஷ்டிப்பதால் இதற்கு கேதார கௌரி விரதம் என்று பெயர். இந்த விரதம் இருப்பதால் பெண்கள் தீர்க்க சுமங்கலியாக தன் கணவருடனும் குடும்பத்தாருடனும் சச்சரவுகள் இன்றி அன்னியோன்னியமாக வாழ்வார்கள்.

கோவர்த்தன தினம்

31-10-2016 திங்கள் கிழமை தீபாவளி அமாவாசைக்கு மறுநாள் பிரதமை அன்று கிருஷ்ணர் மக்களையும் பசுக்களையும் கடும் மழையிலிருந்து காப்பதற்க்காக கோவர்த்தன மலையை குடையாக தூக்கி பிடித்த நாளாக வழிபடப்படுகிறது.

கந்த சஷ்டி விரதம்

அக்டோபர் 31ம் தேதி கந்த சஷ்டி விரதம் ஆரம்பம். இன்று முதல் ஆறு நாட்கள் முருகப்பெருமான் தன்னை வளர்த்த கார்த்திகைப் பெண்களை முன்னிட்டு முருகன் ஆலயங்களில் வழிபாடு நடைபெறும். கந்த சஷ்டி அன்று முருகன் சூரபத்மனை வதம் செய்ததை விளக்கும் வகையில் சூரசம்ஹாரம் நடைபெறும். மறுநாள் முருகன் திருக்கல்யாணம் நடைபெறும்.

கார்த்தீக ஸ்நானம்

அக்டேமுதல் கார்த்திகை மாதம் வருகின்ற அமாவாசை வரை உள்ள முப்பது நாட்கள் நதி ஸ்நநம், புண்ணிய தீர்த்த ஸ்நானம், சமுத்திர ஸ்நானம் செய்யவும் சகலவிதமான தோஷ பரிகாரங்கள் செய்யவும் உகந்த காலமாகும்.

யமத் துவிதியை

01-11-2016 செவ்வாய் கிழமை இன்று யமதர்மராஜன் தன் சகோதரி வீட்டிற்கு சென்று உணவருந்தி சகோதரியை ஆசீர்வாதம் செய்த நாளாகும்.

இன்று சகோதரன் தன் சகோதரியின் அழைப்பின் பேரில் சகோதரியின் வீட்டிற்கு சென்று உணவருந்தி பரிசுப் பொருட்களை பரிமாரிக்கொண்டு சகோதரியை ஆசீர்வாதம் செய்தால் சகோதர சகோதரிகளுக்கிடையே அன்பு என்றென்றும் நிலைத்திருக்கும். சகோதரனுக்கு தீர்க்காயுளும் சகோதரிக்கு தீர்க்காயுளுடன் தீர்க்க சுமங்கலி யோகமும் உண்டாகும். இது எமதர்மன் வாக்கு என்பது ஐதீகம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+