அவதூறாக பேசினால் அரசு வழக்கு தொடரும்.. சட்டசபையில் விஜயதாரணிக்கு அமைச்சர் பதில்
சென்னை: அவதூறாக பேசினால் அரசு சார்பில் வழக்குத் தொடரப்படும் என்று அமைச்சர் சி.வி. சண்முகம் தமிழக சட்டசபையில் இன்று தெரிவித்தார்.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது, விளவங்கோடு எம்எல்ஏ விஜயதாரணி (காங்.), பேசுகையில், அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் மீதான அவதூறு வழக்கை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், பேசியதாவது: தமிழக அரசு குறித்து அவதூறாக பேசினால் வழக்குத் தொடரப்படும். அதனை நீதிமன்றத்தில் எதிர்கொள்ள வேண்டியதுதான்.

விஜயதாரணி மீது அவதூறு வழக்கு இருப்பதால், அவரது இந்த கோரிக்கையை பொது கோரிக்கையாக வைக்க முடியாது என்றார்.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் தனபால், "உறுப்பினர்கள் தங்களுக்கான நேரத்தில், ஆளுநர் உரை குறித்து மட்டுமே பேச வேண்டும். நீதிமன்ற விவகாரங்களை விவாதத்தில் எடுத்துக் கொள்ள வேண்டாம்" என்று அறிவுறுத்தினார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications