தொடர்ச்சியாக 5வது முறை.. மீண்டும் ஏமாற்றிய பருவமழை.. வானிலை மையம் அறிக்கை!
இந்தியாவில் பருவமழை கணித்ததை விட குறைவாக பெய்து இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அதிர்ச்சி அளித்துள்ளது.
Recommended Video

சென்னை: இந்தியாவில் பருவமழை கணித்ததை விட குறைவாக பெய்து இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அதிர்ச்சி அளித்துள்ளது.
இந்தியாவில் பருவமழை ஆய்ந்து ஓய்ந்து இருக்கிறது. கடந்த செப்டம்பர் 30ம் தேதியோடு அதிகாரப்பூர்வமாக பருவமழை முடிந்து உள்ளது.
இந்த நிலையில் தமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியாவில் திடீர் என்று மழை பெய்து வருகிறது. மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக மழை பெய்து வருகிறது. இந்த மழை ஐந்து நாட்களுக்கு பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

மிகவும் குறைவு
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு இருக்கும் தரவுகளின்படி இந்தியாவில் இந்த வருடம் எதிர்பார்த்ததை விட மிகவும் குறைவான மழையே பெய்து இருக்கிறது. எதிர்பார்த்ததை விட 9.4 சதவிகிதம் குறைவான மழையே இந்த பருவமழை அப்போது பெய்து இருக்கிறது. தொடர்ச்சியாக ஐந்தாவது முறையாக இப்படி மழையின் அளவு குறைந்துள்ளது.

எங்கு எல்லாம் குறைவு
2002, 2004, 2009, 2014, 2015, 2016 மற்றும் 2017 ஆகிய வருடங்களில் வரிசையாக மழை குறைந்து கொண்டே வருகிறது. முக்கியமாக இந்த வருடம் வடகிழக்கு மாநிலங்களில் மழை மோசமாக குறைந்து இருக்கிறது. அருணாசல பிரதேசம், மேகாலயா, மணிப்பூர், திரிபுரா ஆகிய மாநிலங்களிலும், மேற்கு இந்தியாவில் மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் , பீகாரில் மழை குறைந்துள்ளது. அதேபோல் குஜராத்திலும் குறைவான மழையே பெய்துள்ளது.

பிரச்சனை
இதனால் பலவிதமான பிரச்சனைகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது. நிலத்தடி நீர் அளவு வேகமாக குறையும். பெருமளவில் விவசாயம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. நதிகளில் நீர்வரத்து வேகமாக குறையும். இதனால் இந்தியாவின் ஜிஎஸ்டியே பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே நிலத்தடி நீர் சதவிகிதம் 70 சதவிகிதமாக குறைந்து போய்விட்டது குறிப்பிடத்தக்கது.

தென்னிந்தியாவின் நிலைமை
ஆனால் அதே சமயம் தற்போதுதான் தென்னிந்தியாவில் அடுத்த மழை தொடங்கி இருக்கிறது. இந்த மாதம் முழுக்க மிதமாகவும், கனமாகவும் மழை பெய்யும் என்று கூறப்படுகிறது. அதேபோல் ஏற்கனவே கேரளாவிலும், கர்நாடகாவிலும், ஆந்திராவிலும் மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications