மோடி வீட்டை விட்டே வெளியே வர முடியாது.. இளைஞர்கள் குச்சியால் அடிப்பார்கள்.. ராகுல் காந்தி பரபரப்பு!

இன்னும் 6 மாதம் கழித்து பிரதமர் மோடி வீட்டை விட்டு வெளியே வர முடியாது, அப்படி அவர் வீட்டை விட்டு வெளியே வந்தால், இளைஞர்கள் அவரை குச்சியால் அடிப்பார்கள் என்று காங்கிரஸ் மூத்த எம்பி ராகுல் காந்தி தெரிவ

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்னும் 6 மாதம் கழித்து பிரதமர் மோடி வீட்டை விட்டு வெளியே வர முடியாது, அப்படி அவர் வீட்டை விட்டு வெளியே வந்தால், இளைஞர்கள் அவரை குச்சியால் அடிப்பார்கள் என்று காங்கிரஸ் மூத்த எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

டெல்லி சட்டசபை தேர்தல் வேகமாக நெருங்கி வருகிறது.70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபையின் பதவிக்காலம் வரும் பிப்ரவரி 22-ஆம் தேதி முடிவடைகிறது. இந்த நிலையில் வரும் சட்டசபை தேர்தல் நடத்தப்படுவதாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார்.

டெல்லி சட்டசபைக்கு வரும் பிப்ரவரி 8-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. இன்றோடு தேர்தல் பிரச்சாரம் முடிகிறது.

டெல்லி பிரச்சாரம்

டெல்லி பிரச்சாரம்

டெல்லியில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, பிரதமர் மோடி நாடு முழுக்க பேசி வருகிறார். தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். ஆனால் இன்னும் 6 மாதம் கழித்து மோடியால் வீட்டை விட்டு வெளியே கூட வர முடியாது. அவரால் மக்களை சந்திக்க முடியாது . அவரை இளைஞர்கள் குச்சியால் அடிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.

மோடி வீடு

மோடி வீடு

ஆம் மோடி வீட்டை விட்டு வெளியே வந்தால் அவரை இளைஞர்கள் குச்சியால் அடிப்பார்கள் . அவர் இளைஞர்களுக்கு வேலை கொடுப்பேன் என்று கூறி ஏமாற்றிவிட்டார். வேலை வாய்ப்பு இல்லாமல் இந்த நாடு முன்னேறாது என்பதை அவர் உணரும் காலம் வரும். இந்தியாவில் 45 வருடத்தில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது.

ஆனால் நிர்மலா சீதாராமன்

ஆனால் நிர்மலா சீதாராமன்

ஆனால் அதை எல்லாம் பற்றி நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் எதுவும் பேசவில்லை. மோடியும் அதை பற்றி தேர்தல் பிரச்சாரத்தில் பேசவில்லை. இளைஞர்களை வேலை இல்லாமல், சும்மாவே வைத்துக் கொள்ள மோடி நினைக்கிறார். அவரின் அரசியல் இதை நம்பித்தான் இருக்கிறது. 2014க்கு முன் மத்திய அரசு மதம் சார்ந்து இல்லை.

குஜராத் எப்படி

குஜராத் எப்படி

ஆனால் இவர் குஜராத்தில் இருந்து வந்தார். நாடு முழுக்க தற்போது விஷத்தை பரப்பி வருகிறார். 2014ல் தொடங்கியது இப்போது வரை நீடிக்கிறது. இளைஞர்கள் வேலை பெற்றால், அவர்கள் துப்பாக்கி ஏந்தி சுற்ற மாட்டார்கள். அதனால் மோடியால் அரசியல் செய்ய முடியாது. மோடி இதனால்தான் இளைஞர்களுக்கு வேலை கொடுக்காமல் ஏமாற்றி வருகிறார்.

தேச பற்று

தேச பற்று

உண்மையான தேச பற்று என்பது இளைஞர்களை காப்பதுதான். அவர்களுக்கு கல்வி கொடுப்பதும், அவர்களுக்கு வேலை கொடுப்பதும்தான் உண்மையான தேச பற்று. அவர்களுக்கு தொழில்நுட்பத்தை கற்றுக்கொடுக்க வேண்டும். அறிவியலை கற்றுக்கொடுக்க வேண்டும். ஆனால் அதை விட்டுவிட்டு இந்த பாஜக அரசு மூட நம்பிக்கைகளை கற்றுக்கொடுத்து வருகிறது. அதற்கு இந்த அரசு தக்க எதிர்வினையை விரைவில் பெறும் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+