ஆம் ஆத்மியில் சேருங்கள் அல்லது கூட்டணி வையுங்கள்.. கமலிடம் 'துண்டுபோடும்' கேஜ்ரிவால்?
கமல்ஹாசனை ஆம் ஆத்மியில் இணைய அழைப்பு விடுப்பதற்காக அரவிந்த் கேஜ்ரிவால் சென்னை வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
Recommended Video

சென்னை: அரசியலுக்கு வரத் துடிக்கும் கமல்ஹாசனை ஆம் ஆத்மி கட்சியில் இணைத்து கொள்ள அழைப்பு விடுப்பதற்காக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் சென்னை வந்துள்ளதாக தெரிகிறது.
சமீபகாலங்களாக நடிகர் கமல்ஹாசன் ஆட்சியாளர்கள் மீதுள்ள வெறுப்பால் அரசியல் பேசி வருகிறார். மேலும் மறைமுகமாக ஆட்சியாளர்களை சாடி வந்த நிலையில் கடந்த சுதந்திர தினத்தன்று முதல் நேரடியாக தாக்கத் தொடங்கினார்.
இதனால் ஆட்சியாளர்களின் ஒட்டுமொத்த எதிர்ப்புக்கும் ஆளான அவர் தனி கட்சியை தொடங்கவுள்ளதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார். தமிழகம், கேரளம் இரு மாநிலங்களிலும் ஆட்சி பொறுப்பேற்று சற்று முன்பின்னாக ஓராண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது.

கேரள முதல்வர்
இதற்கு தமிழகத்தை விடுத்து கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு நடிகர் கமல் வாழ்த்து தெரிவித்திருந்தார். மேலும் கேரள முதல்வர் பினராயி விஜயனை கேரள மாநிலத்துக்கு சென்று சந்தித்தார் கமல்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் கமல் கலந்து கொள்வதாகவும் அவர் அக்கட்சியில் இணையவுள்ளதாகவும் பேச்சு அடிப்பட்டது. இந்நிலையில் நடிகர் கமலை சந்தித்து பேச இன்று டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் சென்னை வந்தார்.

ஆம் ஆத்மியில் இணைப்பு
சென்னை விமான நிலையத்தில் கேஜர்வாலை வரவேற்று வீட்டுக்கு அழைத்து சென்றார் கமலின் மகள் அக்ஷராஹாசன். வலதுசாரி கொள்கைகளுக்கு எதிரான கமல்ஹாசனை இடதுசாரி கொள்கையை கடைபிடிக்கும் தனது கட்சியில் இணைய பேச்சுவார்த்தை நடத்தவே டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் சென்னை வந்துள்ளாதாக தெரிகிறது.

தென்னகத்தில் தேவை
டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் கணிசமான செல்வாக்கு வைத்துள்ள ஆம் ஆத்மி கட்சிக்கு தென் மாநிலங்களில் வேர் இல்லை. கமலை பயன்படுத்தி ஆம் ஆத்மியை தமிழகத்தில் வளர்க்க கேஜ்ரிவால் விரும்புவதாக தெரிகிறது. தனிக்கட்சி துவங்க கமல் உறுதியாக இருந்தால் ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைத்துக்கொள்ள இப்போதே துண்டு போட்டுவிடலாம் என்று நினைக்கிறாராம் கேஜ்ரிவால்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது?












Click it and Unblock the Notifications