கருணாநிதி இன்னும் சில நாட்களில் வீடு திரும்புவார்- குலாம் நபி ஆசாத் நம்பிக்கை
கருணாநிதியின் உடல்நிலை குறித்து டெல்லியிலிருந்து காங்கிரஸ் தலைவர்கள் வருகை தந்துள்ளனர்.
Recommended Video

சென்னை: கருணாநிதி இன்னும் சில நாட்களில் வீடு திரும்புவார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.
கருணாநிதிக்கு உடல்நிலை சரியில்லாமல் உள்ளது. கடந்த ஜூலை 24-ஆம் தேதி முதல் அவருக்கு காய்ச்சல் உள்ளது.
இதனால் அவர் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவருக்கு நேற்று இரவு ரத்த அழுத்தம் குறைந்தது.
|
ஆளுநர்
இதையடுத்து அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அதிகாலை 3 மணி அளவில் அவருக்கு ரத்த அழுத்தம் சீரானது. இதையடுத்து அவரது உடல்நலம் குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று விசாரணை நடத்தினார்.
|
காவேரி மருத்துவமனைக்கு
இந்நிலையில் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க காங்கிரஸ் தலைவர்கள் டெல்லியிலிருந்து சென்னைக்கு வருகை தந்தனர். காங். மூத்த தலைவர்கள் குலாம்நபி ஆசாத், முகுல் வாஸ்னிக் ஆகியோர் காவேரி மருத்துவமனைக்கு சென்றனர்.

கருணாநிதி
கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஸ்டாலின் மற்றும் மருத்துவர்களிடம் விசாரித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தார் குலாம் நபி ஆசாத். அப்போது அவர் கூறுகையில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் கருணாநிதி உடல்நிலை பற்றி விசாரிக்க கோரினர்.

வீடு திரும்புவார்
கருணாநிதிக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களை சந்தித்து பேசினோம். கருணாநிதி உடல் நிலை முன்னேற்றம் அடைந்துள்ளது. இன்னும் சில நாட்களில் கருணாநிதி வீடு திரும்புவார் என்ற நம்பிக்கை உள்ளது.

தென் மாநிலங்கள்
கருணாநிதியை நேரில் நான் சந்திக்கவில்லை. நான் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் என்பதால் ஐசியூவில் இருக்கும் நோயாளியை பார்க்க விரும்பவில்லை. தென் மாநிலங்களின் டாக்டர்கள் மிகுந்த திறமைசாலிகள் என்பதில் எனக்கு நம்பிக்கையுள்ளது என்றார் குலாம் நபி ஆசாத்.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications