ஜனாதிபதி தேர்தல்: எம்.எல்.ஏ.க்களை வளைத்து கண்ணாமூச்சு காட்டும் தினகரன்- கோபத்தில் டெல்லி!
ஜனாதிபதி தேர்தலில் பாஜகவை மிரட்டுவதற்காக எம்.எல்.ஏ.க்களை தினகரன் வளைத்துப் போடுகிறாராம். இதனால் டெல்லி கடுமையான கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
சென்னை: ஜனாதிபதி தேர்தலில் பாஜகவை மிரட்டிப் பார்க்கவே எம்.எல்.ஏக்களை தினகரன் வளைத்துப் போட்டு வருவதாக சசிகலா கோஷ்டி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி தேர்தலுக்கான பணிகளில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது மத்தியில் ஆளும் பா.ஜ.க. கனிமொழி மூலமாகவும் தி.மு.கவுக்கு மறைமுக தூது அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் வரும் ஜூலை 17-ம் தேதி நடைபெற உள்ளது. உத்தரபிரதேச தேர்தல் வெற்றிக்குப் பிறகு, பா.ஜ.கவின் வெற்றி சதவீதம் அதிகரித்துவிட்டது.

60% வாக்குகளுக்கு குறி
பாஜகவின் டார்கெட்டே 60% வாக்குகளைப் பெற வேண்டும் என்பதுதான். அ.தி.மு.கவின் இரண்டு அணிகளையும் ஒன்றாக்கி, முழு வாக்குகளையும் பெற வேண்டும் என்பதும் பா.ஜ.கவின் திட்டம்.

இணைப்பு பேச்சுவார்த்தை
ஓபிஎஸ்ஸிடம் டெல்லி நேரடியாக இதை சொல்லிவிட்டது. இதனால் மீண்டும் இணைப்பு... இணைப்பு எனும் பேச்சுகள் எழத் தொடங்கியுள்ளன.

பாஜக அதிர்ச்சி
அதேநேரத்தில் 30-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்களை தினகரன் அதிரடியாக வளைத்து தம் வசம் வைத்திருப்பது பாஜகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்த எம்.எல்.ஏக்களின் வாக்குகளை வைத்து தினகரன் தங்களுக்கு சவால் விடுகிறாரே என்கிற கடும் கோபத்தில் இருக்கிறதாம் டெல்லி.

பிரதீபா பாட்டீல் தேர்தல்..
கடந்த 2007ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழகத்தில் எதிர்கட்சியாக இருந்த அ.தி.மு.கவில் இருந்து ஆறு எம்.எல்.ஏக்கள். பைரோன்சிங்குக்கு வாக்களிக்காமல், காங்கிரஸ் கட்சியின் பிரதீபா பாட்டிலுக்கு வாக்களித்தனர். அதேபோல், மோடி நிறுத்தும் வேட்பாளருக்கு எதிராக அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களித்தால் என்ன செய்வது?' என்பதால்தான் டெல்லி அமைதியாக வேடிக்கை பார்க்கிறதாம்.

விபரீதம் ஏற்பட்டால்...
தற்போது 50-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்களை வளைக்க இருக்கிறார் தினகரன். ஜனாதிபதி தலைவர் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டுதான் தினகரன் ஆடுபுலி ஆட்டம் ஆடுவதை டெல்லி ரசிக்கவில்லை. ஜனாதிபதி தேர்தலில் மட்டும் இந்த ஆட்டத்தால் பாதிப்பு வந்தால் அவ்ளோதான் என கருவிக் கொண்டிருக்கிறதாம் டெல்லி.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications