வந்தாள் காவிரி.. மேள தாளம் முழங்க காவிரியை வரவேற்ற டெல்டா மக்கள்!

டெல்டா மாவட்ட விவசாயிகள் காவிரியில் இருந்து வரும் நீரை மேள தாளத்துடன் வரவேற்று இருக்கிறார்கள்.

Subscribe to Oneindia Tamil

திருச்சி: டெல்டா மாவட்ட விவசாயிகள் காவிரியில் இருந்து வரும் நீரை மேள தாளத்துடன் வரவேற்று இருக்கிறார்கள்.

பல வருடங்களுக்கு பின் காவிரியில் நீர் கரைபுரண்டு ஓடுகிறது. சென்ற வருடம், ஆடிப்பெருக்கு அன்று பைப் நீரில் வழிபாடு நடத்திய மக்கள் இந்த முறை காவிரியில் நீர் ஓடுவதை கண்டு சந்தோச மகிழ்ச்சியில் கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள்.

Delta people celebrating Cauvery water with special Pooja

கடந்த 19ம் தேதியே மேட்டூரில் இருந்து விவசாய பாசனத்திற்கு அதிக தண்ணீர் திறந்து விடப்பட்டது. தற்போது இந்த தண்ணீர் வரத்து காரணமாக கல்லனையும் நிறைந்து இருக்கிறது. இதனால் கல்லணையும் தற்போது திறந்து விடப்பட்டுள்ளது.

இந்த நீர் மூலம் விவசாயிகள், தங்கள் பாசனத்தை தொடங்க முடியும். இதனால் தற்போது டெல்டா மாவட்ட விவசாயிகள் காவிரியில் இருந்து வரும் நீரை மேள தாளத்துடன் வரவேற்று இருக்கிறார்கள்.

காவிரி கரையோர பகுதிகளில், மேள தளத்துடன், நாதஸ்வரம், மேளம் அடித்து காவிரி தாயை வரவேற்று இருக்கிறார்கள். பல விவசாயிகள், மக்கள் ஒன்றா கூடி காவிரிக்கி மலர் தூவி பூஜையும் நடத்தினார்கள்.

தற்போது மேட்டூர் அணை, 117 அடியை எட்டி இருக்கிறது. இன்று முழு கொள்ளவை அணை அடைந்துவிடும் என்பதால், மொத்தமாக மதகுகள் உயர்த்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.கல்லணையில் இருந்து விநாடிக்கு 17,000 கன அடி நீர் திறக்கப்பட்டு இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+