பெரும் பதற்றத்தில் பக்தர்கள்.. சாகும் வரை உண்ணாவிரதம்.. தருமபுரம் ஆதீனம் அறிவிப்பு
மயிலாடுதுறை: தருமபுர ஆதீனம் சார்பில் மயிலாடுதுறையில் தொடங்கப்பட்ட சண்முகதேசிகசுவாமிகள் இலவச மருத்துவமனையை இடித்தால் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் தனது முகநூலில் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறையில் மயூரநாதர் வடக்கு வீதியில் நகராட்சிக்கு சொந்தமான இலவச பிரசவ மருத்துவமனை உள்ளது.

இந்த இலவச மருத்துவமனை 1943 ஆம் ஆண்டு தருமபுரம் ஆதீனத்தின் 24-வது மடாதிபதியாக இருந்த ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் பிரசவத்தில் இறந்து போன அவரது தாயாரின் நினைவாக ஆதினத்திற்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில் பிரசவ மருத்துவமனையை கட்டினார்.
அப்போதைய ஆங்கிலேய கவர்னர் சர் ஆதர் ஜேம்ஸ் ஹோப் என்பவர் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்றார். எட்டு ஆண்டுகள் நடைபெற்ற கட்டுமான பணி நிறைவடைந்து 1951 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதலமைச்சர் குமாரசாமி ராஜா மருத்துவமனையை திறந்து வைத்தார்.
நகரின் மையப் பகுதியில் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் விஸ்தாரமாக இருந்த மருத்துவமனை சுற்றியுள்ள கிராமப்புற மக்களின் பிரசவ ஆஸ்பத்திரியாக விளங்கி வந்தது. இந்த ஆஸ்பத்திரியினை தருமபுரம் மடத்தின் சார்பில் நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை நல்ல நிலைமையில் இயங்கி வந்த மருத்துவமனை, நகராட்சியின் பராமரிப்பின்மை காரணமாக பழுதடைந்து குப்பை மேடாக மாறிப் போனதாக மயிலாடுதுறை மக்கள் புகார் தெரிவித்தனர்.
தருமபுரம் ஆதீனத்தில் இலவச மருத்துவமனை அமைந்துள்ள இடத்தை ஒப்படைக்க வேண்டும் என்றும், மீண்டும் இலவச மருத்துவமனை அமைக்கப் போவதாக தற்போதைய தருமபுரம் ஆதீனத்தின் 27ஆவது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்யா சுவாமிகள் கோரிக்கை விடுத்து நகராட்சி நிர்வாகம் மற்றும் தமிழக அரசிற்கு கடிதம் எழுதி இருந்தார்.
இதற்கு பதில் வராத நிலையில், அருகில் உள்ள குப்பை தரம் பிரிக்கும் இடத்தை விரிவு செய்து நகராட்சி நிர்வாகம் இலவச மருத்துவமனையை இடித்துவிட்டு அங்கே குப்பைக் கிடங்கு அமைக்கப் போவதாக செய்திகள் வெளியானது. இதற்கு தருமபுரம் ஆதீன குரு மகா சன்னிதானம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து இதுகுறித்து சமூக வலைதளங்களில் தருமபுரம் ஆதீன குரு மகா சன்னிதானம் விடுத்துள்ள அறிக்கையில், இலவச மருத்துவமனையை இடிக்க போவதாக செய்தி வந்துள்ளது. அப்படி ஒரு நிகழ்வு ஏற்படுமாயின் நம் முன்னோர்கள் அமைத்த நினைவு அமைப்பினை காக்க சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம் என்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
திருக்கயிலாய பராமரிப்பு தருமையாதீன 24ஆவது குருமணிகள் தம் தாயார் நினைவாக மகப்பேறு மருத்துவமனை கவர்னரால் தொடங்கப்பெற்று 25ஆவது குருமணிகள் காலத்தில் மாநில முதல்வர் மாண்புமிகு குமாரசாமிராஜா அவர்களால் திறந்து வைக்கப்பெற்றது இதில் ஜெர்மனிய மருத்துவர் பல்லாண்டுகாலம் இருந்து பலருக்கு இலவசமாக மருத்துவம் பார்க்கப்பெற்றது இதை நாம் ஆதீனபராமரிப்பில் நடத்த நகராட்சிக்கு எழுதியும் பதில்வராத பொழுதே அதை இடிக்கபோவதாக செய்தி வந்துகொண்டுள்ளது அப்படியொரு நிகழ்வு ஏற்படுமாயின் நம்முன்னோர்கள் அமைத்த நினைவு அமைப்பினை காக்க சாகும் வரைஉண்ணாவிரதம் இருந்து காப்போம் என்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஸ்ரீலஸ்ரீ கயிலை குருமகாசந்நிதானம்.
பட்டினபிரவேசம் நிகழ்ச்சிக்கு தடை விதித்த காரணத்தால் கடந்த ஆண்டு தருமபுரம் ஆதினம் பற்றிய செய்திகள் ஊடகங்களில் வெளியானது. இந்து அமைப்புகளும் பாஜகவினரும் பட்டினப்பிரவேசம் நடத்துவோம் என்று கூறி மயிலாடுதுறை வந்தனர். அரசு அனுமதியோடு பட்டினப்பிரவேசம் நடைபெற்றது. இந்த ஆண்டு எந்த பிரச்சினையும் இல்லாமல் பட்டினப்பிரவேசம் நடைபெற்றது. இதனிடையே மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான இலவச மருத்துவமனையை இடிக்கப்போவதாக தகவல் வெளியாகவே சாகும் வரை உண்ணாவிரதப்போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளதார் ஸ்ரீலஸ்ரீ கயிலை குருமகாசந்நிதானம்.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications