கறுப்புப் பணம் முழுமையாக ஒழிந்து விட்டதா? ஒன் இந்தியாவின் மெகா சர்வே முடிவுகள்
கறுப்புப் பணம் முற்றிலுமாக ஒழிந்துவிட்டதாக என்று ஒன் இந்தியா நடத்திய மெகா சர்வேயின் முடிவுகள் வெளியாகியுள்ளன.
சென்னை: கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக என்று கூறி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாத நோட்டுக்களாக மத்திய அரசு அறிவித்தது. இது எந்த அளவிற்கு கறுப்புப் பணத்தை ஒழித்துவிட்டது என்று வாசகர்களிடம் ஒன் இந்தியா சர்வேயின் முடிவுகள் இதோ.
தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், வங்காளி மற்றும் குஜராத்தி என மொத்தம் 8 மொழிகளில் ஒன்இந்தியா வெப்சைட் மூலம் மத்திய அரசு அறிவித்த ரூபாய் நோட்டு செல்லாது தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டு சர்வே நடத்தப்பட்டது.
ஒன்இந்தியா நடத்திய சர்வேயின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அதன் முடிவுகளைப் பார்ப்போம்.

ஒன்இந்தியாவின் 11 கேள்விகள்
ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு தொடர்பாக ஒன்இந்தியா 11 கேள்விகளை தயார் செய்து வெப்சைட் வாசகர்களிடம் முன் வைத்தது. இந்த சர்வேயில் 8 மொழிகளிலும் சேர்ந்து 31,198 பேர் சர்வேயில் கலந்து கொண்டு பதில் அளித்துள்ளனர். தமிழ் மொழியில் மட்டும் மிக அதிகபட்சமாக 24,322 பேர் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதில் அளித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

புதிய நோட்டுக்களோடு அரசு தயாராக இருக்க வேண்டாமா?
ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிப்பதற்கு முன்பாகவே கூடுதலாக ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து தயாராக வைத்திருக்க வேண்டாமா என்ற கேள்விக்கு, 59.3 சதவீதம் பேர் முன்பாக புதிய ரூபாய் நோட்டுக்களைத் தயாராக வைத்திருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். 40.7 சதவீதம் பேர் வேண்டியதில்லை என்று கருத்துத் தெரிவித்துள்ளனர்.

சாமானியர்களுக்கு ரூபாய் ஒழிப்பு உதவியுள்ளதா?
ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு சாமானிய மக்களுக்கு எந்த அளவிற்கு உதவி கரமாக இருந்துள்ளது என்று ஒன்இந்தியா எழுப்பிய கேள்விக்கு, எந்த வகையிலும் உதவவில்லை என்று 40.7 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். சாமானியர்களுக்கு இது உதவியாக இருக்கிறது என்று 59.3 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.

கறுப்புப் பணம் முழுமையாக ஒழிந்து விட்டதா?
மத்திய அரசின் இந்த நடவடிக்கையின் மூலம் கறுப்புப் பணம் முழுமையாக ஒழிந்துவிட்டதா என்ற கேள்விக்கு, `ஆம்` என்று 54.3 சதவீதம் பேரும், `இல்லை` என்று 45.7 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications