சிலிண்டர் டெலிவரி.. பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை வாங்க இல்லத்தரசிகள் கோரிக்கை
வீடுகளுக்கு கேஸ் சிலிண்டர் போடும் போது பழைய ரூபாய் நோட்டுக்களை வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெண்கள் கோரியுள்ளனர்.
சென்னை: சில்லறைத் தட்டுப்பாடு அதிகம் உள்ளதால், கேஸ் சிலிண்டர்கள் டெலிவரி செய்யும் போது பழைய ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த 8ம் தேதி அறிவித்ததில் இருந்து மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் சில்லறைத் தட்டுப்பாடு, பழைய நோட்டுகளை மாற்றுவதில் உள்ள பிரச்சனை என நாடு முழுவதும் கடந்த ஒரு வாரமாக மக்கள் பெரும் பிரச்சனைக்கு உள்ளாகி உள்ளனர். மேலும், பணப்புழக்கமும் முடங்கி போயுள்ளது. பல்வேறு வகையிலும் சிறு மற்றும் குறு வியாபாரங்கள் சரிந்துள்ள நிலையில், வீடுகளில் கேஸ் சிலிண்டர் பிரச்னை பெரும் பிரச்சனையாகியுள்ளது.

வீடுகளில் காலியான சிலிண்டரை கொடுத்துவிட்டு, புதிய சிலிண்டரை பெற கையில் பணம் இல்லாததால் ஏராளமான வாடிக்கையாளர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வீட்டில் கேஸ் தீர்ந்துவிட்ட நிலையில், பழைய சிலிண்டரை எடுத்துக் கொண்டு புது சிலிண்டரை போட வருவோரிடம் 2000 ரூபாய் நோட்டைக் கொடுத்தால் சில்லறை இல்லை என்று வாங்க மறுக்கின்றனர். வீட்டில் உள்ள பெண்களிடம் சில்லறை நோட்டுகளும் இல்லை. இதனால் வீட்டில் சமைக்க முடியாமல், குழந்தைகளுக்கு பதில் சொல்ல முடியாமலும் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
ஆனால், ஒரு சில கேஸ் ஏஜென்சிகள் பழைய 500 ரூபாயை வாங்கிக் கொண்டு சிலிண்டரை டெலிவரி செய்துவிட்டும் செல்கின்றனர். என்றாலும் பல ஏஜென்சிகள் இதனை செய்வதில்லை.
எனவே, கேஸ் ஏஜென்சிகள் பழைய நோட்டை வாங்க வேண்டும் என்றும் அல்லது டெபிட் கார்டு, கிரெடிட் கார்ட் மூலம் பணத்தை செலுத்த வழி வகை செய்ய வேண்டும் என்றும் வாடிக்கையாளர்கள் கோரியுள்ளனர். மேலும், இதற்கான நடவடிக்கைகளை பெட்ரோலிய நிறுவனங்கள் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications