தூத்துக்குடியில் டெங்கு பாதிப்பில் மக்கள்: தூங்கும் சுகாதாரத் துறை
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 7 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் சுகாதாரத் துறை சரியாக வேலை செய்யாமல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
தூத்துக்குடியில் கடந்த சில நாட்களாக பருவ மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. மேலும் பல தெருக்கள் மத்தியில் சாக்கடை நீருடன் மழை நீர் தேங்கியுள்ளது. ஆனால் இதுவரை சுகாதாரத் துறை, மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி உள்ளிட்ட நிர்வாகம் சார்பில் முறையாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொது மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

குறிப்பாக மழை நீர் தேங்கும் பகுதிகளில் கொசு மருந்து அடிக்கப்படவில்லை, கிருமி நாசினி பவுடர் தூவப்படவில்லை. இந்த காரணத்தால் மாவட்டத்தில் 60 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையை நாடியுள்ளனர். இவர்களில் பலர் புற நோயாளியாக சிகிச்சை பெற்று விட்டு வீடு திரும்பியுள்ளனர்.
டெங்க அறிகுறி தெரிந்த 10 பேரிடம் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. இதில நான்கு பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. தூத்துக்குடி அந்தோணியர்புரம் பகுதியை சேர்ந்த பெண் உள்பட 3 பேருக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டு தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் அங்குள்ள தனியார் மருத்துவனையிலும் 3 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் டெங்கு தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. ஆனால் சுகாதாரத் துறையினர் போதிய அக்கறை காட்டாமல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications