பயப்படாதீங்க.. டெங்கு ஒரு சாதாரண காய்ச்சல்தான்: சொல்கிறது மத்தியக்குழு!
டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு சாதாரண காய்ச்சல் தான் என தமிழகம் வந்துள்ள மத்தியக்குழு தெரிவித்துள்ளது.
சேலம்: டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு சாதாரண காய்ச்சல் தான் என தமிழகம் வந்துள்ள மத்தியக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
டெங்குவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள சேலத்தில் மத்தியக்குழுவினர் இன்று ஆய்வு நடத்தி வருகின்றனர். அரசு மருத்துவமனை டெங்கு பாதிப்புள்ள கிராமங்களில் அந்த குழுவினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் ஆய்வின் போது மத்தியக்குழு மருத்துவர் கவுசல் குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு சாதாரண காய்ச்சல்தான் என்று அவர் கூறினார்.
டெங்கு காய்ச்சல் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார். தணிக்கை குழு தெரிவித்தப்படியே டெங்கு காய்ச்சலுக்கு தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 என மத்திய அரசு அறிவித்தாக கூறிய கவுசல் குமார், ஆய்வு செய்தால் டெங்குவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை தெரியவரும் என்றார்.


Click it and Unblock the Notifications
