மாறி வரும் தட்பவெட்ப நிலை… கொசு தொல்லை அதிகரிப்பு.. தூத்துக்குடியில் டெங்கு பரவும் அபாயம்
தூத்துக்குடி: தூத்துக்குடி பகுதியில் தட்பவெட்ப நிலை அடிக்கடி மாறி வருவதால் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து வருகிறது. இதனால் டெங்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பீதியில் உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பல பகுதிகளில் காய்ச்சல் அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு புதூர் டாக்டர் பெருமாள் சித்த மருத்துவமனையில் பொதுமக்களுக்கு இலவசமாக நிலவேம்பு குடிநீர் வழங்கப்படுகிறது.

மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் குப்பைகளை அகற்றுதல், தண்ணீர் தேங்கும் பகுதிகளை கண்டறிந்து சுத்தம் செய்தல், பழைய டயர், தேங்காய் சிரட்டை உள்ளிட்ட கழிவுப் பொருட்களை அப்புறப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை சுகாதார துறையினர் தீவிரமாக செய்து வருகின்றனர்.
நெல்லை பகுதியிலும் டெங்கு காய்ச்சல் அறிகுறி தெரிந்தால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், தூத்துக்குடி பகுதியில் ரெவரண்ட் பாஸ்கரன் இலவச நிலவேம்பு குடிநீர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.டாக்டர் பெருமாள் சித்த மருத்துவமனையில் டிசம்பர், ஜனவரி மாதம் முழுவதும் இலவச நிலவேம்பு குடிநீர் வழங்கப்படும் என்று டாக்டர் சுரேஷ் கார்த்திக் பாபு தெரிவித்துள்ளார்.இந்தத் திட்டத்தை நகரின் பல பகுதிகளில் விரிவுபடுத்தி நடத்த உள்ளனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications