அதிமுக ஆட்சி ஒழிந்தால் தான் டெங்கு ஒழியும்.. ஸ்டாலின் விளாசல்
தமிழகத்தில் அதிமுக ஆட்சி ஒழிந்தால்தான் டெங்கு ஒழியும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் அதிமுக ஆட்சி ஒழிந்தால்தான் டெங்கு ஒழியும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர் தமிழகத்தில் தற்போது நடைபெறும் ஆட்சி ஒழிந்தால் தான் டெங்கு ஒழியும் என்றார்.

மேலும் டெங்குவால் இறந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் தான் அரசு அந்த விவரங்களை சொல்லாமல் உண்மைகளை மூடி மறைப்பதாகவும் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுவதாக கூறிய ஸ்டாலின் அக்கூட்டத்தில் வாக்காளர்கள் பட்டியலை சரிபார்ப்பது குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக கூறினார்.












Click it and Unblock the Notifications