”டிப்ரஷன்” நோயால் வாழ்க்கையை இழந்து தவிக்கும் இளைஞர்கள்
சென்னை: இன்றைய விரைந்து ஓடும் காலகட்டத்தில் எய்ட்ஸ், புற்றுநோய் போன்ற கொடிய நோய்களையெல்லாம் தூக்கி சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றது ஒரு புது வியாதி.
குறிப்பாக இளைஞர்களைத் தாக்கும் இவ்வியாதி கிட்டதட்ட அவர்களை அழிவுப்பாதையிலேயே தள்ளி விட்டு விடுகின்றது.
உடலில் ஏற்படும் நோய்க்கு கூட மருந்து உண்டு.ஆனால், "டிப்ரஷன்" என்று அழைக்கப்படும் இம்மனச்சிதைவு நோய்க்கு மருந்து இருந்தாலும் அது பலனளிப்பதில்லை.

தவறான எண்ணங்கள்:
மாறிவரும் கால கட்டத்தில் வாழ்க்கை என்பது இளைஞர்களைப் பொறுத்தவரை காதல் பூக்கும் உலகம், பணம் காய்க்கும் தொழில், நாகரிக அரக்கன் என்றவைகளை மட்டுமே கொண்ட ஒன்றாக நினைக்க வைத்துள்ளது.

எல்லைமீறும் ஆசைகள்:
ஆனால், அந்த அளவுகடந்த ஆசைகளில் எல்லைமீறிப்போய் அவர்கள் செய்யும் சில காரியங்கள்தான் அவர்களுடைய வாழ்க்கையையே அழித்து விடுகின்றது.பெற்றவர்களின் அன்பெல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே தெரிவதில்லை.

டிப்ரஷன் என்னும் “எமன்”:
அவர்களைப் பொறுத்தவரையில் கைநிறைய சம்பளம் வாங்கும் நான் ஏன் பெற்றோரை மதிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்து விடுகின்றது. அதில் எல்லை மீறிப் போய் , காதல் படுகுழியில் விழுந்து, வாழ்க்கையின் தாத்பரியங்கள் புரியாமல் எல்லாவற்றையும் இழந்து கடைசியில் "டிப்ரஷன்" என்ற காலனுக்குள் சிக்கி காணாமலே போய் விடுகின்றனர்.

கூடா நட்பு கேடாய் முடியும்:
சரி அப்படி ஒன்று,இரண்டு பேர் தங்களின் நிலை புரிந்து, பாலின வேறுபாடுகளைக் கடந்து நல்ல நட்புடன் இருந்தாலும் மற்றவர்கள் விடுவதில்லை.நண்பனுக்கு உதவி செய்கின்றேன் என்ற பெயரில் அவர்களின் மனதை தூண்டி தவறான விசயங்களை விதைத்து விடுகின்றார்கள்.

வாழ்க்கை இழப்பு:
விளைவு எல்லாவற்றையும் இழந்து, மனச்சிதைவுக்கு உள்ளாகி, சரியான முடிவு எடுக்க முடியாமல் வாழ்க்கையையே தொலைத்து விடுகின்றனர்.

குடும்பம்தான் மருந்து:
குடும்ப சூழல், கூட்டுக்குடும்பம் என்ற முடிச்சுகள் நம்மை கட்டிப்போடுவதற்காக ஏற்படுத்தப்பட்டதல்ல.நம்முடைய வாழ்க்கை எப்போதும் தறிகெட்டு போய்விடக் கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்ட சொர்க்கங்கள் அவை. வாழ்க்கை முழுதும் நமக்காக அர்ப்பணித்த பெற்றோருக்கு கண்டிப்பாக நமக்கு எது நல்லது என்பதையும் தெரிய வைக்க முடியும்.

மனச்சிதைவுக்கு மருந்து:
எனவே, இளைஞர்கள் இதுபோன்ற சிக்கல்களில் சிக்கி, சிதைந்து தற்கொலை முடிவிற்கு போகும் நிலைமையை தடுக்க ஒரே வழி குடும்பத்தினர் காட்டும் பரஸ்பர பாசம் மற்றும் அன்பால் மட்டும்தான் முடியும்.வாழ்க்கையை புரிந்து அவர்களுடைய எல்லைகளை வகுத்துக் கொள்ள வேண்டும்.இதுதான் இம்மனச்சிதை நோய்க்கு ஒரே மருந்தாகும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications