For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தூத்துக்குடியில் ஓபிஎஸ்.. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களைச் சந்தித்தார்

By Siva
Google Oneindia Tamil News

Recommended Video

    தூத்துக்குடி வந்த துணைமுதல்வர்: வரவேற்ற கலெக்டர்

    தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்.

    தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி போராட்டம் நடத்திய மக்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 17 வயது பள்ளி மாணவி உள்பட 13 பேர் பலியாகினர்.

    Deputy CM OPS to meet the injured in Tuticorin shootout

    இந்நிலையில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களை துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    அவருடன் அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ ஆகியோரும் சென்றனர். காயம் அடைந்தவர்களை சந்தித்த பிறகு அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கிளம்பிச் சென்றார்.

    ஓ.பன்னீர் செல்வத்தின் வருகையையொட்டி தூத்துக்குடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் துணை முதல்வர் வந்துள்ளார்.

    English summary
    Deputy CM O. Panneerselvam has met those who got injured in the shootout happened in Tuticorin last week over Sterlite issue.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X