அப்துல் கலாம் பிறந்தநாள் விழா! பேச்சு, கவிதை போட்டிகளில் அசத்திய தேவக்கோட்டை பள்ளி மாணவர்கள்!

Subscribe to Oneindia Tamil

தேவகோட்டை: மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சார் ஆட்சியர் ராகுல் குமார் தலைமை தாங்கி பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 96-ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த விழாவையொட்டி பள்ளிகளில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

devakottai abdul kalam

அந்த வகையில் சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியிலும் பல்வேறு போட்டிகள் நடந்தன. இந்த போட்டிகளுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். மாணவி நந்தனா வரவேற்றார்.

பேச்சுப் போட்டியில் ஹாசினி, நவீன், ரித்திகா, கவிதைப் போட்டியில் பிரணவி, சர்வேஸ்வரன், விஜய கண்ணன், ஆகாஷ், நிகில், சுஜன், பொன்மொழிப் போட்டியில் ருத்ரேஸ்வரன், நித்திஷா, ஏஞ்சல், மாலினி ஆகியோர் வெற்றி பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிய சார் ஆட்சியர் ராகுல் குமார் சிறப்புரையாற்றினார். ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை ஆசிரியைகள் சிவரஞ்சனி, ஆர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.

ராமேஸ்வரத்தில் 1931 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் தேதி அப்துல் கலாம் பிறந்தார். இவர் "இந்தியாவின் ஏவுகணை மனிதர்" என்றும் "மக்கள் ஜனாதிபதி" என்றும் அழைக்கப்பட்டார். இளைஞர்களை கனவு காணுமாறு அறிவுறுத்தினார். இளைஞர்கள், மாணவர்களிடம் கல்வியையும் அறிவையும் வளர்ப்பதில் அவர் கொண்டிருந்த ஈடுபாட்டை கவுரவிக்கும் வகையில் அவருடைய பிறந்தநாள் உலக மாணவர் தினம் என கொண்டாடப்படுகிறது.

அப்துல் கலாம், இஸ்ரோ, டிஆர்டிஓ ஆகிய நிறுவனங்களில் பணியாற்றி இந்தியாவின் முதல் உள்நாட்டு செயற்கைக்கோள் ஏவுகணையான எஸ்எல்வி-3 திட்டத்தை வெற்றிகரமாக வழிநடத்தினார். அது போல் அக்னி, பிரித்வி போன்ற ஏவுகணைகளை உருவாக்குவதிலும் முக்கிய பங்காற்றியுள்ளார். இவர் எழுதிய அக்னி சிறகுகள் எனும் நூல் இளைஞர்களை வெகுவாக ஊக்கப்படுத்தியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+