ஒருவழியா ஒத்துக்கிட்டாங்க! அரிசி விலை உயர்ந்தது உண்மை தான்.. ஏன் தெரியுமா? அமைச்சர் சொன்ன விளக்கம்!
சென்னை: தமிழகத்தில் அரிசி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளன. அரிசி மட்டுமல்லாது, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களினுடைய விலையும் கடுமையாக உயர்ந்திருக்கிறது. இந்த நிலையில் கர்நாடகா, ஆந்திராவில் இருந்து அரிசி வரத்து குறைந்துள்ளதால் தமிழகத்தில் அரசு விலை உயர்ந்திருப்பதாகவும், ஒரிரு நாட்களில் விலை உயர்வு தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ராமன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில், ஜூன் மாதத்திலிருந்து கடந்த நான்கு மாதங்களில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இந்த விலைவாசி உயர்வின் காரணமாக ஏழை எளிய மக்கள் குடும்பத் துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

குறிப்பாக, கடந்த ஜூன் மாதத்தில் ரூ.1,100-க்கு விற்கப்பட்ட ஒரு மூட்டை அரிசியின் விலை இன்று ரூ.700 உயர்ந்து ரூ.1,800-க்கு விற்கப்படுகிறது. அதாவது, ரூ.60-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ பொன்னி அரிசி இன்று ரூ.20 உயர்ந்து ரூ.80-க்கு விற்கப்படுகிறது.
அரிசி விலை உயர்வு
ரூ.900-க்கு விற்கப்பட்ட ஒரு மூட்டை இட்லி அரிசி இன்று ரூ.300 உயர்ந்து ரூ.1,200-க்கு விற்கப்படுகிறது. அதாவது, ரூ.35-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ இட்லி அரிசி ரூ.15 உயர்ந்து ரூ.50-க்கு விற்கப்படுகிறது.
ரூ.120-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ துவரம்பருப்பு இன்று ரூ.40 உயர்ந்து ரூ.160-க்கு விற்கப்படுகிறது. ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் ரூ.130-ல் இருந்து ரூ.180-க்கும் விற்கப்படுகிறது. ரூ.120-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ உளுத்தம்பருப்பு இன்று ரூ.30 உயர்ந்து ரூ.150-க்கு விற்கப்படுகிறது. ரூ 180-க்கு விற்கப்பட்ட ஒரு இலோ பூண்டு இன்று 54 62% உயர்ந்து க்கு விற்கப்படுகிறது.
காய்கறி விலை
அதே போல் காய்கறி விலையும் இரட்டிப்பு மடங்காக உயர்ந்துள்ளது. வெங்காயம், தக்காளி. உருளைக்கிழங்கு, இஞ்சி, எலுமிச்சை பழங்களும் 30 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை விலை உயர்ந்துள்ளது. இதனால் புதுச்சேரியில் வசிக்கும் ஏழை எளிய மக்கள் இந்த விலைவாசி உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதை அடுத்து இந்த விவகாரத்தை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன. அரிசி உள்ளிட்ட அவற்றின் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி வருகின்றன.
உணவுத்துறை அமைச்சர்
இந்த நிலையில் அரிசி விலை உயர்வுக்கு காரணம் என்ன என்பது குறித்து விளக்கம் அளித்திருக்கிறார் உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன். அதற்கு முன்னதாக தமிழகத்தில் அரிசி விலையேற்றும் இல்லை என அவர் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," கர்நாடகா ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து அரசி வரத்து குறைந்துள்ளதால் அரிசி விலை உயர்ந்திருக்கிறது.
தமிழக அரசு
சர்க்கரை, பருப்பு விலையும் உயர்ந்திருப்பதாக சொல்லப்படும் நிலையில் ஒரிரு நாட்களில் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும். விலை கண்காணிப்பு குழுவுடன் ஆலோசனை நடத்தி வரும் நிலையில் இது தொடர்பாக முடிவு அறிவிக்கப்படும். மேலும் அனைத்து தரப்பு கருத்துக்களையும் உள்வாங்கி மக்களுக்கு தேவையானதன்படி நடவடிக்கை எடுக்க இந்த அரசு செயல்பட்டு வருகிறது. அரிசி, சர்க்கரை, பருப்பு என அனைத்து உணவுப் பொருளுக்கும் தேவையான திட்டங்கள் வகுக்கப்பட்டிருக்கிறது. இன்னும் சில நாட்களில் அது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும்" எனக் கூறியிருக்கிறார்.




Click it and Unblock the Notifications
