தீபாவளி பண்டிகை! ரேஷன் கடைகளில் பாமாயில் விநியோகத்திற்கு ஹைகோர்ட் தடை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் கடைகளில் 200 லட்சம் பாமாயில் பாக்கெட்டுகளை விநியோகம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

தீபாவளி பண்டிகையையொட்டி, ரேஷன் கடைகளில் மக்களுக்கு பாமாயில் விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஒரு லிட்டர் வீதம் சுமார் 600 லட்சம் பாமாயில் பாக்கெட்டுகளை கொள்முதல் செய்ய தமிழ்நாடு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை டெண்டர் அறிவிப்பை கடந்த ஜூன் 5-ஆம் தேதி வெளியிட்டது.

palm oil supply in ration shops

கடந்த செப்டம்பர் 8-ஆம் தேதி டெண்டர் கோரப்பட்டு, 4 நிறுவனங்களுக்கு பாமாயில் பாக்கெட்டுகளை தயாரிக்கும் டெண்டர் வழங்கப்பட்டது. இதில் முதல் கட்டமாக 200 லட்சம் பாமாயில் பாக்கெட்டுகளை வரும் 29-ஆம் தேதிக்குள் நுகர்பொருள் வாணிபக் கழக குடோன்களுக்கு இந்த நிறுவனங்கள் விநியோகம் செய்ய கடந்த செப் 29ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

விநியோகம் செய்ய வேண்டிய பாமாயில் பாக்கெட்டுகள் விகிதாச்சார அடிப்படையில் பிரிக்கவில்லை என கூறி நுகர்பொருள் வாணிபக் கழகம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து டெண்டர் எடுத்த கே.டி.வி.ஹெல்த் புட் நிறுவனம் சார்பில் சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

அதில், "200 லட்சம் பாக்கெட்டுகளை முதலில் விநியோகம் செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் எம்ஜிஎம் நிறுவனம் 80 லட்சம் பாக்கெட்டுகளும், 210 பாக்கெட்டுகளை விநியோகம் செய்ய டெண்டர் எடுத்த குமார் ஆக்ரோ நிறுவனத்திற்கு 52 லட்சம் பாக்கெட்டுகளும், 180 லட்சம் பாக்கெட்டுகளை விநியோகம் செய்ய டெண்டர் எடுத்த இன்டகரேட் நிறுவனத்திற்கு 34 லட்சம் பாக்கெட்டுகளையும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதாவது விநியோகம் செய்ய வேண்டிய பாக்கெட்டுகள் சரியான விகிதாச்சார அடிப்படையில் பிரித்து கொடுக்கப்படவில்லை. 360 லட்சம் பாக்கெட்டுகளை விநியோகம் செய்ய டெண்டர் எடுத்துள்ள எங்களுடைய நிறுவனம் வெறும் 34 லட்சம் பாக்கெட்டுகளை வழங்க வேண்டும் என்றும் 150 லட்சம் பாக்கெட்டுகளை விநியோகம் செய்ய வேண்டிய எம்ஜிஎம் ஆயில் நிறுவனம் 80 லட்சம் பாக்கெட்டுகளை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது சரியானது அல்ல.

எனவே பாமாயில் விநியோகம் தொடர்பாக கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். விகிதாச்சார அடிப்படையில் பாமாயில் பாக்கெட்டுகளை விநியோகம் செய்ய உத்தரவிடும் படி தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.சரவணன் ஆஜரானார். இதையடுத்து பாமாயில் விநியோகம் தொடர்பான செப்டம்பர் 29-ஆம் தேதி நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு வரும் நவம்பர் 2ஆம் தேதி வரை இடைக்கால தடை விதிக்கப்பட்டது. மேலும் இந்த வழக்கு விசாரணை நவம்பர் 2-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+