ஜல்லிக்கட்டு விவகாரத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படக் கூடாது் -டிஜிபி அசோக் குமார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜல்லிக்கட்டுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் கண்காணிக்க வேண்டும் என்று டிஜிபி அசோக்குமார் மாவட்ட எஸ்.பிக்களுக்கு சர்க்குலர் அனுப்பியுள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் நேற்று விதித்துள்ள இடைக்காலத் தடை தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு கடந்த சில தினங்களுக்கு முன்னர் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து தென் மாவட்ட ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும், மாடு பிடி வீரர்களும், நிகழ்ச்சி ஏற்பட்டாளர்களும் இரவு பகலாக அதற்கான ஏற்பாடுகளை உற்சாகமாக மேற்கொண்டு வந்தனர்.

DGP Ashok Kumar circular to district sp's

இதையடுத்து மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் இரண்டு இளைஞர்கள் தீக்குளிக்க முயற்சி செய்தனர். உடனடியாக, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை தடுத்து நிறுத்தியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. உச்ச நீதிமன்ற தடையை நீக்க கோரி, கடை அடைப்பு, சாலை மறியல், கருப்புக்கொடி போராட்டம் என பல்வேறு போராட்டங்களில் மக்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஜல்லிக்கட்டு நடைபெறும் வாடிவாசல் முன்பு கூடிய நூற்றுக்கணக்கானோர் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். மதுரை, அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட இடங்களில் இன்றும் போராட்டங்கள் தொடர்ந்தன. மேலும் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைக்கும் வரை போராட்டங்கள் தொடரும் என்று ஜல்லிக்கட்டு வீரர்களும், பொது மக்களும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து ஜல்லிக்கட்டு விவகாரத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் கண்காணிக்க வேண்டும் என்று டிஜிபி அசோக்குமார் மாவட்ட எஸ்.பிக்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் வாடிவாசல் பகுதி முழுவதும் போலீசார் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து ஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டங்களில் ஈடுபடுவோர் கைது செய்யப்படலாம் என்று பரபரப்பு நிலவுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+