யார் மகன் ? மேலூர் தம்பதி வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் தனுஷ் மனு !
நடிகர் தனுஷ் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதுரை: தன்னை மகன் என உரிமை கொண்டாடி மேலூர் நீதிமன்றத்தில் வயதான தம்பதி தாக்கல் செய்துள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் தனுஷ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சிவகங்கை அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் டைம்கீப்பராக பணியாற்றியவர் கதிரேசன்(60). அவரது மனைவி மீனாட்சி. கடந்த 2002ம் ஆண்டு பிளஸ் 1 படித்துக் கொண்டிருந்த தங்களின் மகன் கலையரசன் தங்களை பிரிந்து சென்றுவிட்டதாகவும், அவர் தான் தனுஷ் என்ற பெயரில் படங்களில் நடிப்பதாகவும் தெரிவித்தனர்.

இதை தனுஷும் அவரது தந்தையுமான கஸ்தூரி ராஜாவும் மறுத்தனர். இதையடுத்து, கதிரேசன் இது தொடர்பாக மதுரை மாவட்டம் மேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு கடந்த டிச. 25-ல் விசாரணைக்கு வந்தபோது, ஜனவரி 12ம் தேதி நடிகர் தனுஷ் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஜன. 12-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது தனுஷ் சார்பில் பதில் மனுத் தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டதால், விசாரணையை மார்ச் 3-ம் தேதி நீதித்துறை நடுவர் ஒத்திவைத்தார். இந்நிலையில் மேலூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் தனுஷ் உயர் நீதிமன்ற கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் கதிரேசன், மீனாட்சி தம்பதியினர் கூறியிருப்பது அனைத்தும் தவறானது. எனவே அவர்களின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும், அதுவரை விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என தனுஷ் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.சொக்கலிங்கம் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. தனுஷின் மனுவுக்கு கதிரேசன், மீனாட்சி ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை பிப். 8-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications