தர்மபுரியில் தம்பதியின் படுக்கையறைக்குள் பாய்ந்த வெளிச்சம்.. ஜன்னல் அருகில் பதறியடித்து ஓடிய உருவம்
தர்மபுரி: வாடகைக்கு குடியிருந்தவரின் படுக்கையறையில் பேனா கேமரா வைத்த குற்றச்சாட்டில் மருத்துவக்கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் நினைவிருக்கிறதா? அந்த வீட்டில் குடியிருப்பவர்களின் ப்ரைவேட் வீடியோக்கள், பேனா கேமராவில் இருப்பதாக போலீசாரும் அப்போது கூறியிருந்தனர்.. இந்நிலையில், தர்மபுரியில் நடந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதுதொடர்பான விசாரணையை போலீசார் நடத்தி வருகிறார்கள்.
சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்தது.. சென்னை: ராயபுரத்தை சேர்ந்த 30 வயதுடைய பெண் ஒருவர், தன்னுடைய கணவருடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

இவர் சம்பவத்தன்று, தன்னுடைய படுக்கை அறையின் மறைவான இடத்தில் பேனா ஒன்று இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.. அதை எடுத்து பார்த்தபோது அதில் சிறிய அளவில் கேமரா பொருத்தப்பட்டிருந்தது தெரியவந்தது. உடனே அப்பெண், தனது கணவருக்கு தெரிவித்தார். அவர் அந்த பேனாவை ராயபுரம் போலீசில் ஒப்படைத்து, அதுகுறித்து புகார் அளித்தார்.
உடை மாற்றும் வீடியோ
இதுசம்பந்தமாக சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதுடன், பேனாவிலிருந்த கேமராவையும் ஆய்வு செய்தனர்..
அதில், அந்தப் பெண் உடை மாற்றுவது உள்ளிட்ட வீடியோக்கள் இருந்தன,.. இதையடுத்து, கேமராவை படுக்கை அறையில் வைத்தது யார் என போலீஸார் நடத்திய விசாரணையில், அந்த பெண் வசித்து வரும் வீட்டின் உரிமையாளரின் மகனும், முதுநிலை பல் மருத்துவ மாணவருமான இப்ராஹிம் (36) என்பவர் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.
வாடகை வீடு என்பதால் அந்த வீட்டின் இன்னொரு சாவி, வீட்டின் ஹவுஸ் ஓனரிடம் இருந்துள்ளது. அதன்மூலம் யாரும் இல்லாத நேரத்தில் கதவைத் திறந்து, படுக்கை அறையில் பேனா கேமராவை இப்ராஹிம் வைத்ததும் அம்பலமானது.. இதையடுத்து பல் மருத்துவ மாணவரை போலீஸார் கைது செய்திருந்தனர்..
படுக்கையறையில் தம்பதி
இந்நிலையில், இதே போன்ற சம்பவம் மீண்டும் தர்மபுரியில் நடந்திருப்பது அதிர்ச்சியை தந்து வருகிறது.. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியை சேர்ந்த 27 வயது இளைஞருக்கு திருமணம் ஆகி விட்டது. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவு வீட்டில் உள்ள படுக்கையறையில் மனைவியுடன் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென படுக்கை அறைக்குள் வெளிச்சம் வந்துள்ளது.. அதாவது வெளிப்பகுதியிலுள்ள ஜன்னலின் மேல் பகுதியில் இருந்து, இந்த வெளிச்சம் வந்திருக்கிறது.. ஜன்னலின் அருகில் நின்றிருந்த ஒருவர், தன்னுடைய செல்போன் மூலம் படுக்கை அறையில் இவர்களை படம் பிடித்தவாறு இருந்துள்ளார்..
கண்ணில் பட்ட வெளிச்சம்
வெளிச்சம் கண்ணில் பட்டதால் திடுக்கிட்டு எழுந்த இளைஞர் உடனடியாக வீட்டிற்கு வெளியே சென்று பார்த்தார்... அப்போது ஒருவர் அங்கிருந்து விழுந்தடித்து கொண்டு ஓடியதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அந்த வீட்டின் அருகிலுள்ள சிசிடிவி கேமராவை இளைஞர் ஆய்வு செய்தார்..
அப்போது செல்போனில் வீடியோ எடுத்த நபர் கார்த்திக் என்பது தெரியவந்தது... உடனே இளைஞர் இதுகுறித்து, கார்த்திக்கிடம் சென்று கேள்வி எழுப்பியதுடன், கார்த்திக்கின் செல்போனையும் வாங்கி பார்த்தார்.. அதில், இளைஞரின் படுக்கையறை காட்சிகள் நிறைந்திருப்பதை கண்டு திடுக்கிட்டார்.
பாலக்கோடு போலீஸ் ஸ்டேஷன்
உடனே கார்த்திக், "இதை பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது, அதையும் மீறி சொன்னால், உன் படுக்கையறை காட்சிகளை சோஷியல் மீடியாவில் பரப்பி விடுவேன்" என்று மிரட்டி உள்ளார். இதைக்கேட்டு மேலும் அதிர்ச்சியடைந்த இளைஞர், உடனடியாக பாலக்கோடு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், கார்த்திக்கை கைது செய்துள்ளனர்..
கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக்கு 36 வயதாகிறது.. பாலக்கோட்டை சேர்ந்தவர்.. வீடு, மனை புரோக்கராக உள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் பாலக்கோடு பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications