வாகனம் மூலம் இலவச தண்ணீர் விநியோகம்: தேமுதிக எம்.எல்.ஏ ஏற்பாடு
தருமபுரி: தருமபுரி சட்டமன்றத் தொகுதியில் தண்ணீர் பிரச்சினை நிலவும் கிராமங்களுக்கு வாகனம் மூலம் இலவச குடிநீர் விநியோகம் செய்ய தேமுதிக எம்.எல்.ஏ. நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
தருமபுரி தொகுதி தேமுதிக எம்.எல்.ஏ. பாஸ்கர், கடந்த 2 ஆண்டுகளாகவே கோடைகாலத்தில் இலவச குடிநீர் விநியோகம் செய்து வருகிறார். வறட்சி அதிகரித்து, கடும் குடிநீர்ப் பற்றாக்குறை நிலவும் கிராமங்களுக்கு, லாரி அல்லது டிராக்டர் மூலம் சொந்த செலவில் தண்ணீரை விநியோகம் செய்வார்.
தேர்தல் நடத்தைவிதிகள் அமலில் இருந்த காரணத்தால் இந்த ஆண்டு குடிநீர் விநியோகம் செய்ய முடியவில்லை. தற்போது தண்ணீர் பந்தலுக்கு தடையில்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டதால் நேற்று முதல் குடிநீர் விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது.
நல்லம்பள்ளி ஒன்றியம், தொப்பூர் பகுதியில் அமைந்துள்ள கம்மம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட சோளியானூர் உள்ளிட்ட கிராமங்களில், நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால், கடும் குடிநீர்ப் பிரச்சினை நிலவுகிறது.
இந்த கிராமங்களுக்கு நேற்று தருமபுரி எம்.எல்.ஏ. பாஸ்கர், நேற்று குடிநீர் விநியோகத்தைத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், தேமுதிக நல்லம்பள்ளி ஒன்றியச் செயலர் குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கம்மம்பட்டி ஊராட்சியில் குடிநீர்ப் பிரச்சினை தீரும் வரை வாகனங்கள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்படும். இதேபோல், இண்டூர் உள்ளிட்ட பகுதிகளிலும், மழைக்காலம் வரை தொடர்ந்து வாகனங்கள் மூலம் குடிநீர் வழங்க உள்ளோம் என்று எம்.எல்.ஏ. பாஸ்கர் தெரிவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications