குடுகுடுன்னு மலை உச்சிக்கு ஓடியது யார் பாருங்க.. நம்ம தருமபுரி கலெக்டர் சாந்தியா? சபாஷ் தர்மபுரி
தருமபுரி: நீண்ட கால கனவு தருமபுரி மலைமாவட்ட மக்களுக்கு நிறைவேறப்போகிறது.. இதனால், மலை கிராமத்தினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். என்ன நடந்தது?
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த வட்டவனஹள்ளி ஊராட்சியில் உள்ளது ஏரிமலை, கோட்டூர் மலை போன்ற மலை கிராமங்கள்.. பன்னெடுங்காலமாகவே, இந்த கிராமங்களுக்கு முறையான சாலை வசதிகள் கிடையாது.. இதனால், மருத்துவம், பள்ளி உள்ளிட்ட தேவைகளுக்கு வெளியில் செல்ல முடியாமல் இந்த கிராம மக்கள் அவதிக்கு ஆளாகி உள்ளனர்..

கிராம மக்கள்: எனவே, கிராம மக்களே ஒன்றிணைந்து மண் சாலை அமைத்து, சாலையை பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் மழை வந்துவிட்டால், இந்த மண் சாலை முழுவதுமாக மண் அரிப்பு ஏற்பட்டு பயன்படுத்த முடியாத நிலைமை ஆகிவிடுகிறது. வனத்துறை சாலை அமைக்க அனுமதி கொடுத்தால் மட்டுமே, மத்திய, மாநில அரசுகள் சாலை வசதியை செய்து தர முடியும்.
இதனால் கிராம மக்கள் பல்வேறு இடங்களில் மனு கொடுத்து பார்த்தனர். இந்தியா சுதந்திரம் அடைந்து 77 வருடங்களுக்கு மேலாகியும், சாலை வசதிகள் இல்லாமல் இருப்பது கடினமாக உள்ளதாக முறையிட்டார்கள்.. உடல்நிலை சரியில்லாத நேரங்களில் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் உயிரிழப்புகள் ஏற்படுவதால், தார் சாலை அமைக்க வனத்துறை அனுமதி அளிக்க வேண்டும் என்றும் பலமுறை புகார் மனுக்களை தந்தார்கள்.
கோட்டூர் மலை: ஆனால், யாருமே நடவடிக்கை எடுக்கவில்லை. அதிலும், கோட்டூர் மலை கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும்நிலையில், 4 கிலோ மீட்டர் செங்குத்தான மலைப்பாதையில்தான் நடந்து செல்கிறார்கள். எனவேதான், கடந்த 2021 தேர்தலையே, இந்த கிராம மக்கள் புறக்கணித்திருந்தனர். ஆனால், கொரோனா காலத்தில், தருமபுரி எம்பி செந்தில் குமார் இந்த கிராம மக்களை தேடிச்சென்று நலத்திட்ட உதவியை வழங்க வந்திருந்தார்.
அப்போது செந்தில் குமாரிடம் பொதுமக்கள் மொத்தமாக திரண்டு சாலை வசதி செய்து தர கேட்கவும், உடனடியாக இதற்கான முயற்சியில் இறங்கினார் செந்தில் குமார். மத்திய வனத்துறை அமைச்சகம் மற்றும் பசுமை தீர்ப்பாயம் போன்ற துறைகளுக்கு கடிதம் எழுதியதுடன், சாலை வசதிக்கான பல முயற்சிகளை மேற்கொண்டார். இறுதியில், கோட்டூர் மலை கிராமத்திற்கு சாலை அமைக்க மத்திய வனத்துறை அனுமதி அளித்தது.
உற்சாக வரவேற்பு: உடனே செந்தில் குமாருக்கு கோட்டூர் கிராம மக்கள், தங்கள் பகுதிக்கு வர வேண்டும் என அழைப்பு விடுத்தனர். அதன்படியே அங்கு சென்ற தர்மபுரி எம்.பிக்கு பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்று தங்களின் மகிழ்ச்சியை அம்மக்கள் வெளிப்படுத்தியிருந்தார்கள்.
இப்போது, விஷயம் என்னவென்றால், தருமபுரி மாவட்டத்தில் 2 மலைக் கிராமங்களுக்கு டிராக்டர்கள் செல்லும் வகையில் சாலை அமைக்கப்பட்டுவிட்டது.. இந்த மலைகளில் வசிக்கும் மக்கள் மலையடிவாரம் வரை நடந்து சென்ற பிறகே, பஸ்கள் மூலம் வெளியூர்களுக்கு சென்று வந்த நிலையில், இப்போது பிரத்யேக சாலை வந்துவிட்டது.
மலை உச்சி: 2 மாதங்களுக்கு முன்பு, மாவட்ட ஆட்சியர் சாந்தி, நேரடியாக மலைஉச்சி வரை அலுவலர்களுடன் நடந்து சென்று ஆய்வு மேற்கொண்டார்... விரைவில் தேர்தல் வரஉள்ள நிலையில், வாக்குப்பதிவு உபகரணங்களை டிராக்டர் போன்ற வாகனங்கள் மூலம் எடுத்துச்செல்லும் வகையில் முதல்கட்டமாக மண் சாலைகள் ஏற்படுத்தப்படும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார். இப்போது சாலைகள் போடப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து கலெக்டர் சாந்தி சொன்னபோது, "கோட்டூர் மலைக்கிராமத்துக்கு அடிவாரத்தில் இருந்து 6 கிலோ மீட்டர் தூரமும், ஏரிமலை கிராமத்துக்கு 4.2 கிலோ மீட்டர் தூரமும் கொண்ட நடைவழி சாலை மட்டுமே இருந்தது.
சாலை வசதிகள்: கோட்டூர் மலை வாக்குச்சாவடி மையத்தில் 310 வாக்காளர்களும், ஏரிமலை வாக்குச் சாவடி மையத்தில் 324 வாக்காளர்களும் உள்ளனர்.. கோட்டூர் மலைக்கு டிராக்டர் செல்லும் வகையில் சாலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஏரிமலைக்கு செல்லும் சாலையை அந்த கிராம மக்களே ஓரளவு செம்மைபடுத்தி இருந்ததால், இப்போது இன்னும் மேம்படுத்தி மலைமீது டிராக்டர் செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது.
நிரந்தர சாலை அமைப்பதற்கான நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேர்தலுக்கு பிறகு, வாய்ப்புள்ள திட்டத்தின் நிதியை பயன்படுத்தி இரு மலைக் கிராமங்களுக்கும் தார்சாலை அமைத்துத் தரப்படும்" என்று உறுதி தந்திருக்கிறார்.
கழுதைகள்: அதாவது, கடந்த 75 ஆண்டுகளாகவே இந்த கிராமங்களுக்கு சாலை வசதி இல்லாததால், கழுதைகளை வாகனமாக பயன்படுத்தி வந்துள்ளனர்.. எந்த பொருட்களையும் கழுதையின் மீது வைத்தே, மலை மீது கொண்டு சென்று வந்தனர். இம்மக்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ரேஷன் பொருட்களும், கழுதைகள் உதவியுடன் தான் எடுத்துச் செல்லப்படுகின்றன.
இத்தனை முறை நடந்த தேர்தல்களின்போதும், உணவுப்பொருட்கள் மற்றும் வாக்களிக்க தேவையான மின்னணு வாக்கு பெட்டிகள் அனைத்தையுமே கழுதைகள் மூலம் கொண்டு செல்லப்பட்டு வந்தது. இப்போதுதான் முதல்முறையாக கழுதைக்கு பதிலாக, டிராக்டர்கள் பயன்படுத்தப்போகிறார்களாம்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications