தர்மபுரி தொப்பூர் கணவாயில் அமானுஷ்ய மர்மங்கள்? அத்தனை விபத்துகளுக்கும் காரணமே இதுதான்: பிரபலம் பளிச்
தர்மபுரி: தொப்பூர் கணவாய் பகுதி மிகவும் ஆபத்தான மலைவழி மற்றும் வளைவு நிறைந்த பகுதியாகும்.. கார்களும் லாரிகளும், வாகனங்களும் பயணிக்கும் இடமாக உள்ளது. இங்கு குறிப்பாக இரட்டை பாலம் அருகே, பல விபத்துக்கள் நடந்துள்ளன. பேய், பிசாசு, அமானுஷ்ய காரணங்கள்தான் இந்த விபத்துகளுக்கு காரணம் என்றும் சிலர் சொல்கிறார்கள். இந்நிலையில், இதுகுறித்து மூத்த வழக்கறிஞர் தமிழ்வேந்தன் விரிவாக பேசியிருக்கிறார்.
King 24x7 என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள வழக்கறிஞர் தமிழ்வேந்தன், "தொப்பூர் கணவாயில் பேய், பிசாசுகள் எதுவும் கிடையாது.. கடந்த 12 ஆண்டுகளில் தொப்பூர் பகுதியில் நடந்த விபத்துகளில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்..

இது பெங்களூரு முதல் டெல்லி வரை செல்லும் NH 44 என்ற இந்தியாவின் மிக முக்கியமான முதுகெலும்பு நெடுஞ்சாலையாக உள்ளது..
விபத்துகளுக்கான காரணங்கள்
நிறைய ரோடுகள் மலைப்பகுதிகள் அருகில் போடப்படுவதுதான் சிக்கல்.. இந்த மலைப்பாதை மிகவும் செங்குத்தானது என்பதால், கனரக லாரிகள் ஏறுவதற்கு மிகவும் சிரமப்படுகின்றன.. இன்ச் இன்ச்சாக நகரும்.. சில நேரங்களில் லாரிகள் பின்னோக்கி நகராமல் இருக்க மரக்கட்டைகளை வைத்து நிறுத்த வேண்டிய நிலைமை உள்ளது..
சில டிரைவர்கள் டீசலை சேமிப்பதற்காக இறக்கத்தில் வண்டியை நியூட்ரல் செய்து விடுகிறார்கள்.. இதனால் வண்டி ஈர்ப்பு விசையினால், மிக அதிக வேகத்தில் கண்ட்ரோலை இழந்து 100-120 கி.மீ) வேகத்தில் செல்ல ஆரம்பிக்கும். அந்த நேரத்தில் பிரேக் பிடித்தாலும் வண்டி நிற்காது, கட்டுப்பாட்டை இழந்து முன்னே செல்லும் வாகனங்கள் மீது மோதிவிடுகின்றன..
13 பாயிண்ட் - பிரேக்
அதேபோல எந்த கியரில் மலையில் ஏறினோமோ, அதே கியரில்தான் இறங்க வேண்டும் என்பது விதி. ஆனால், வேகத்திற்காக கியரை மாற்றுவதும், அல்லது கியர் பாக்ஸில் பற்கள் உடைந்து போவதும் விபத்துக்கு வழிவகுக்கின்றன..
அதேபோல முன்பு இருந்ததை போல இப்போது யாரும் கிளீனராக இருந்து வண்டி பழகி டிரைவர் ஆவதில்லை. நேரடியாக வண்டி ஓட்ட வருவதால், வண்டியின் நுணுக்கங்கள் அவர்களுக்கு தெரிவதில்லை.
வண்டியின் வேகம் அளவு 13 பாயிண்டிற்கு மேல் இருந்தால்தான் பிரேக் சரியாக வேலை செய்யும். இது போன்ற தொழில்நுட்ப விஷயங்கள் தெரியாமல் வண்டி ஓட்டுவதும், மலைப்பாதைகளில் வாகனத்தை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்த முறையான பயிற்சியோ, அனுபவமோ இப்போதுள்ள டிரைவர்களிடம் குறைவாக உள்ளதும் விபத்துகளுக்கு காரணமாகிவிடுகின்றன.
பேய் அமானுஷ்ய காரணங்கள்
அதேபோல லாரி தொழில் நலிவடைந்துள்ளதால், டயர்கள், பிரேக் போன்ற பாகங்களை முறையாக பராமரிப்பதில்லை.. பிரேக் சிஸ்டம், வண்டியின் மற்ற பாகங்களை சரியாக சர்வீஸ் செய்யாததும் விபத்துக்கு காரணமாகின்றன.. நீண்ட தூர பயணம் மற்றும் குடும்பச் சிக்கல்களால் ஏற்படும் மன அழுத்தம் கவனச்சிதறலை உண்டாக்குகிறது.
நெடுஞ்சாலைகளில் L போர்டு மாட்டிக்கொண்டு அனுபவம் இல்லாதவர்கள் மெதுவாக செல்வது, பின்னால் வேகமாக வரும் லாரிகளுக்கு சிக்கலை ஏற்படுத்துகின்றன.. .
இவ்வளவு குறைகளை வைத்துக்கொண்டு, பேய் அல்லது அமானுஷ்ய காரணங்கள் சொல்வது தவறான விஷயம்.. முழுக்க முழுக்க மனித தவறுகளாலேயே ஏற்படும் விபத்துகளாகும்.
தீர்வு மற்றும் பாதுகாப்பு ஆலோசனைகள்
இந்த பகுதியில் விபத்துகளை தவிர்க்கவே, அரசு சுமார் 7 கிலோமீட்டர் தூரத்திற்கு 120 தூண்களை கொண்ட பிரம்மாண்ட மேம்பாலம் ஒன்றைக் கட்டி வருகிறது.
இந்த பாலம் 120 தூண்களைக் கொண்டு அமைக்கப்படுவதால், சாலையின் செங்குத்தான பள்ளம் மற்றும் உயரமான பகுதிகள் சமன் செய்யப்படும். இதன் மூலம் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழப்பது 100% குறையும்.. டிரைவர்கள் போதிய ஓய்வு எடுக்க வேண்டும், மது குடித்துவிட்டு வண்டி ஓட்டக்கூடாது..
டீசலை மிச்சப்படுத்த ஒருபோதும் வாகனத்தை நியூட்ரல் செய்யக்கூடாது., வாகனத்தை ஒரு ட்ரிப் முடித்தவுடன் முறையாகச் சோதிக்க வேண்டும். குறிப்பாக, ரீ-பட்டன் டயர்களை தவிர்த்து, தரமான டயர்களை பயன்படுத்த வேண்டும். தூக்கம் வந்தால் வண்டியை ஓரம் கட்டி ஓய்வெடுக்க வேண்டும். உள்ளூர் மக்கள் சாலையைக் கடக்கும்போது அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications