தர்மபுரி தமிழ் இலக்கியா.. பஸ் ஸ்டாண்டுன்னு கூட பார்க்கலையே.. கணவனுக்கு அப்படி ஒரு ஸ்கெட்ச்

Subscribe to Oneindia Tamil

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே உள்ள கணபதிபட்டி காலனியை சேர்ந்த தமிழ் இலக்கியாவும், அவரது காதலன் சரவணக்குமாரும் இணைந்து இலக்கியாவின் கணவர் ராஜாராமை தீர்த்துக்கட்டியுள்ளனர். இந்ததிட்டத்தை எப்படி நிறைவேற்றினார்கள்.. போலீசில் அவர்கள் சிக்கியது எப்படி, அவர்கள் அளித்த வாக்குமூலம் என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே உள்ள கணபதிபட்டி காலனியை சேர்ந்த 30 வயதாகும் ராஜாராம் என்பவர் கட்டிட தொழிலாளியாவார். இவருடைய மனைவி தமிழ் இலக்கியா. இவர்களுக்கு 3 குழந்தைகள் இருக்கிறார்கள். கூலித்தொழிலாளியான ராஜாராம் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்றவர், அந்த பகுதியில் உள்ள நிழற்கூடத்தில் தலையில் கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

dharmapuri crime

இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் ராஜாராமின் மனைவி தமிழ் இலக்கியாவுக்கு தொடர்பு இருப்பதை கண்டுபிடித்தனர். அவருக்கும் அரூரை சேர்ந்த சரவணகுமாருக்கும் (23) ஏற்பட்ட கள்ளக்காதல் காரணமாக இந்த கொலை நடந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கள்ளக்காதலன் சரவணகுமாரை நேற்று முன்தினம் கைது செய்தனர். தமிழ் இலக்கியாதான் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலைக்கு திட்டமிட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரையும் போலீசார் கைது செய்தனர்.

கொலை தொடர்பாக தமிழ் இலக்கியா, போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். இதுபற்றி போலீசார் வெளியிட்ட தகவல்களை பார்ப்போம். தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே உள்ள கணபதிபட்டி காலனியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான ராஜாராம், உள்ளூரில் வேலை இல்லாததால், கோவைக்கு அடிக்கடி வேலைக்கு சென்று வந்திருக்கிறார். கணவன் அடிக்கடி வெளியூருக்கு வேலைக்கு சென்றதால், அரூரில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் தமிழ் இலக்கியா பியூட்டிபார்லர் வைப்பதற்காக பயிற்சிக்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு அடிக்கடி வந்துபோன சரவணகுமாருடன் தமிழ் இலக்கியாவிற்கு பழக்கம் ஏற்பட்டதாம். இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதாம். இந்த நிலையில் ராஜராமுக்கும் கள்ளக்காதலன் சரவணக்குமாருக்கும் ஒரு கட்டத்தில் அறிமுகம் ஏற்பட்டது. அப்போது கள்ளக்காதல் விவகாரம் ராஜராமுக்கு தெரியவந்தது. இதனால் தமிழ் இலக்கியாவின் நடத்தையில் சந்தேகம் அடைந்து அடிக்கடி ராஜாராம் தகராறில் ஈடுபட்டு வந்தாராம்.

இதுபற்றி தமிழ் இலக்கிய, தனது கள்ளக்காதலன் சரவணகுமாரிடம் கூறினாராம். அப்போது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவர் ராஜாராமை கொலை செய்ய நாங்கள் 2 பேரும் திட்டமிட்டார்களாம். இதனிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஊருக்கு தமிழ் இலக்கியாவின் கணவர் ராஜாராம் வந்துள்ளார். அப்போது சரவணகுமார், நண்பர் என்ற முறையில் இலக்கியாவின் கணவரை மது அருந்த அழைத்து சென்றார். மதுபோதையில் இருந்த ராஜாராமை வீட்டில் விட்டுவிடுவதாக கூறி மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு வந்திருக்கிறார்.

கல்லடிப்பட்டி பகுதியில் வந்தபோது அதிக போதையால் ராஜராமுக்கு மயக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனால் பஸ் நிறுத்த பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் இலக்கியாவின் கள்ளக்காதலன் சரவணகுமார் அருகே இருந்த கல்லை எடுத்து ராஜாராமின் தலையில் போட்டு உள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் அங்கேயே துடிதுடித்து இறந்துபோனார். இந்த தகவலை இலக்கியா கூறியிருந்தார். கொலைக்கு திட்டமிட்டதை விசாரணையில் இலக்கியாவிடம் கண்டுபிடித்ததால் அவரை கைது செய்துவிட்டோம் என போலீசார் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+