தயாளு அம்மாள் திடீர் சுகவீனம்.. மருத்துவமனையில் அனுமதி!
மூச்சுத் திணறல் காரணமாக தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Recommended Video

சென்னை : திடீர் உடல்நல குறைவு காரணமாக, தி.மு.க., முன்னாள் தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து திமுக தலைவர் ஸ்டாலின் மருத்துவமனைக்கு இன்று காலை நேரில் வருகை தந்தார்.
தயாளு அம்மாளுக்கு 82 வயதாகிறது. சிறிது காலமாகவே அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருக்கிறார். இதனால் கருணாநிதி கட்சியிலிருந்து ஒதுக்க ஆரம்பித்த காலத்திலேயே தயாளு அம்மாளுக்கும் உடல் நலம் சரியில்லாமல் போனது.

வீல் சேர்
கருணாநிதி சென்னை, காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உயிருக்கு போராடி கொண்டிருந்தபோது தயாளு அம்மாள் மருத்துவமனைக்கு வந்தார். அப்போதும் அவர் வீல் சேரில்தான் அழைத்து வரப்பட்டார்.

மூச்சுத் திணறல்
எனினும், ஸ்டாலின் வேட்பு மனுதாக்கல் செய்தபோது தயாளு அம்மாள் விபூதி வைத்து ஆசி கூறி அனுப்பினார். இந்நிலையில், நேற்றிரவு தயாளு அம்மாளுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சென்னை ஆயிரம் விளகுகு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

விரைந்த மகள்கள்
அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தயாளு அம்மாளுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து ராஜாத்தி அம்மாள், மகள்கள் செல்வி, கனிமொழி உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர்.

ஸ்டாலின் வருகை
இதனையடுத்து மருத்துவமனையில் இருந்து ஓரிரு நாளில் தயாளு அம்மாள் வீடு திரும்பவுர் என மருத்துவமனை தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில் தயாளு அம்மாளின் உடல்நலம் குறித்து விசாரிக்க திமுக தலைவர் ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனைக்கு இன்று காலை வந்தார். அங்கு மருத்துவர்களிடம் தயாளு அம்மாள் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.

சோகத்தில் குடும்பம்
கருணாநிதி மறைவுக்குப் பின் பெரும் சோகத்தில் இருந்த குடும்பத்தினர். ஸ்டாலினுக்கு கிடைத்த புதிய பொறுப்பையடுத்து, நேற்றுதான் அதிலிருந்து விடுபட முயன்றார்கள். ஆனால் தற்போது தயாளு அம்மாவின் உடல்நலம் அறிந்து மீண்டும் அக்குடும்பத்தார் சோகம் நிறைந்து காணப்படுகின்றனர்.
-
கோட்டையை எட்டிப்பிடிக்கும் ‘மகளிர்’ மேஜிக்! ரூ.2000 தேடி வருதுங்க! வங்கி கணக்கில் அடிக்கும் ஜாக்பாட் -
"கவுண்டவுன் ஸ்டார்ட்".. அண்ணா அறிவாலயத்தில் மின்னும் டிஜிட்டல் போர்டு.. திமுகவினர் உற்சாகம்! -
"ப்ளீஸ் திருமா".. ஸ்டாலினின் அந்த வார்த்தை! மா.கம்யூனிஸ்ட்டால் விசிகவிற்கு விழும் அடி.. திமுக ‘செக்’ -
டெல்லியில் எடப்பாடி பழனிசாமி வெயிட்டிங்! இவர்களிடம் தமிழ்நாடு சிக்கினால் என்ன ஆகும்? ஸ்டாலின் அட்டாக் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா?












Click it and Unblock the Notifications