ஸ்டாலினுக்கும் துரைமுருகனுக்கும் விபூதி வைத்து ஆசி வழங்கிய தயாளு அம்மாள்!
சென்னை: ஸ்டாலினுக்கும் துரைமுருகனுக்கும் விபூதி வைத்து தயாளு அம்மாள் ஆசிர்வதித்து அனுப்பினார்.
திமுக தலைவராக இருந்த கருணாநிதி கடந்த 7-ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதைத் தொடர்ந்து கட்சியை வழிநடத்த திமுக தலைவர் பதவியில் ஸ்டாலினை அமர்த்துவது என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

வாக்குப் பதிவு
இந்நிலையில் திமுக பொதுக்குழு ஆகஸ்ட் 28-இல் நடைபெறும் என்று திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவர், பொருளாளர் வாக்குப் பதிவு நடைபெறும் என்று பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவித்திருந்தார்.

முதன்மை செயலாளர் துரைமுருகன்
அதன்படி திமுக செயல்தலைவராக இருந்த ஸ்டாலின் தலைவர் பதவிக்கும், முதன்மை செயலாளராக இருந்த துரைமுருகன் பொருளாளர் பதவிக்கும் போட்டியிடுகின்றனர். கருணாநிதியின் சமாதியில் வேட்புமனுவை வைத்து ஆசி பெற்றனர்.

தயாளு அம்மாள்
பின்னர் கோபாலபுரத்துக்கு சென்ற அவர்கள் அங்கு கருணாநிதியின் படத்துக்கு விளக்கேற்றி வேட்புமனுவை வைத்து ஆசி பெற்றனர். இதையடுத்து அவர்களுக்கு கருணாநிதியின் மகன் தமிழரசு, தயாநிதிமாறன், சண்முகநாதன் உள்ளிட்டோர் வாழ்த்தினர்.

விபூதி வைத்து ஆசி
இதைத் தொடர்ந்து ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் தயாளு அம்மாளை சந்தித்து ஆசி பெற்றனர். அப்போது இருவருக்கும் விபூதி வைத்து ஆசி வழங்கினார் தயாளு அம்மாள். இதையடுத்து இருவரும் சேர்ந்து அண்ணா அறிவாலயத்துக்கு சென்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
-
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்











Click it and Unblock the Notifications