தூத்துக்குடி மருத்துவக் கல்லூரிக்கு வேட்டி கட்டி வந்த பணியாளர்கள்...
தூத்துக்குடி: தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வேட்டி தினம் கொண்டாடப்பட்டது.
நெசவாளர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும், கைத்தறி ஆடைகளின் விற்பனையை அதிகப்படுத்தவும், பாரம்பரியமான கைத்தறி ஆடைகளை அனைவரும் அணியவேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலும் தமிழகம் முழுவதும் வேட்டி தினம் கொண்டாடப்பட்டது.
அதுதொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வேட்டி தினம் கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு மருத்துவக்கல்லூரி முதல்வர் எட்வின்ஜோ தலைமை வகித்தார். கண்காணிப்பாளர் ராஜேந்திரரத்னம் முன்னிலை வகித்தார். இதை முன்னிட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் ஆண் பணியாளர்கள் வேட்டி அணிந்தும், பெண் பணியாளர்கள் கதர்சேலை அணிந்தும் பணிக்கு வந்திருந்தனர்.
அனைத்து பணியாளர்களும் வேட்டி தினத்தை மகிழ்ச்சியாக கொண்டாடினர்.












Click it and Unblock the Notifications