"நைட்டியுடன்".. கதறி கதறி அழுத திமுக பெண் பிரமுகர்..திமுக கவுன்சிலர் ஆவேச தாக்குதல்..விக்கித்த கோவை

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை திமுகவில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் குறித்த வீடியோவும் இணையத்தில் வெளியாகி பரபரப்பை கூட்டி வருகிறது.

கோவை திமுக 20 வது வார்டு வட்ட துணைச் செயலாளராக இருப்பவர் அன்னபூரணி. இவர் தங்கள் பகுதியில் புதர் மண்டி கிடந்த இடத்தை சுத்தம் செய்ய திமுக கவுன்சிலர் மரியராஜ் என்பவரிடம் பலமுறை வலியுறுத்தியுள்ளதாக தெரிகிறது..

ஆனால், வேலை எதுவும் நடக்கவில்லை.. இதனால், மாநகராட்சி துப்புரவு பணியாளர்களின் உதவியுடன் அந்த பகுதியை அன்னபூரணியே சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

Did dmk councillor attack dmk women cadre and what happened in coimbatore

ஆத்திரம்: இதில் ஆத்திரமடைந்த மரியராஜ், தன்னுடைய ஆதரவாளர்களுடன் திரண்டு வந்து அன்னபூரணியை பொதுவெளியில் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.. தன்னுடைய பகுதி என்பதால், நைட்டியுடனேயே அன்னபூரணி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்திருக்கிறார்.. அப்போது, அவருடைய ஆடைகளையும் கிழித்து மரியராஜ் அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது.. இதனால், திமுக மாமன்ற உறுப்பினர் மரியராஜ் மீது சரவணம்பட்டி போலீசிலும் புகார் தந்துள்ளார்..

அடியாட்களுடன் வந்து கொலை மிரட்டல் விடுவதாகவும், மரியராஜ் தாக்கியதில் தன்னுடைய ஆடை கிழிந்ததாகவும், மரியராஜின் குடும்ப உறுப்பினர்களும் ஆபாச வார்த்தைகளால் பேசி மிரட்டுவதாகவும் அந்த புகாரில் அன்னபூரணி பரபரப்பு குற்றச்சாட்டினை தெரிவித்துள்ளார்..

வயதான அப்பா: அதுமட்டுமல்ல, வயதான அப்பா, கணவருடன் தனியாக வசிப்பதால் இவர்களால் அச்சம் ஏற்பட்டு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகவும் அன்னபூரணி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

சில மாதங்களுக்கு முன்புகூட, கோவையில் பெண் கவுன்சிலர் புகார் ஒன்றை கிளப்பியிருந்தார்.. கோவை மாநகராட்சியில் 34-வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினராக இருப்பவர் மாலதி. கல்விக் குழுவின் தலைவராகவும் உள்ளார்.. இவர் கவுண்டம்பாளையம் பிஎன்டி காலனியில் உள்ள ராஜன் நகர் பகுதியில் வசித்து வருகிறார். இவரது வீட்டிலிருந்து சுமார் 10 வீடு தள்ளி, பாஜக பிரமுகர் சுபாஷ் என்பவர் வசித்து வருகிறார்.. இவர்கள் இருவருக்கும் வீட்டின் முன்பாக கார் நிறுத்துவதில் தகராறு முற்றிப்போய், அது போலீஸ் வரை விவகாரம் சென்றது.

Did dmk councillor attack dmk women cadre and what happened in coimbatore

அவலம்: இது சம்பந்தமான வீடியோவும் அப்போது வெளியாகி இருந்தது.. திமுக, பாஜக என்பதுபோய், திமுகவினரே ஒருவரை, ஒருவர் பொது வெளியில் தாக்கிகொள்ளும் அவலங்கள் ஆரம்பித்துள்ளதே என்று பொதுமக்கள் வேதனையை வெளிப்படுத்தி வருகிறார்கள்..

அதேசமயம், பொதுவெளியில் பெண் என்றும் பாராமல் கடுமையாக தாக்கி உடையை கிழித்த சம்பவம் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.. திமுக கவுன்சிலரும், வார்டு செயலாளரும் தாக்கிக்கொண்ட இந்த வீடியோவும், மரியராஜ் ஆதரவாளர்களை திட்டி அன்னபூரணி கதறி அழும் வீடியோவும் சோஷியல் மீடியாவில் வெளியாகி, சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+