Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விடிகாலையில்.. மனைவியின் "சிரிப்பு சத்தம்".. பதறி ஓடிய கணவர்.. கடைசியில் பார்த்தால்.. அடக்கொடுமையே

மனைவியை கொன்ற கணவரை மதுராந்தகம் போலீசார் கைது செய்தனர்

Subscribe to Oneindia Tamil

செங்கல்பட்டு: ஒரே நாளில் தாய், தகப்பனை இழந்து, 2 குழந்தைகள் கண்ணீர் வடித்து நிற்கின்றன.. செங்கல்பட்டு மாவட்டத்தில் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது..

மதுராந்தகம் அருகே கழனிபாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார்... மதுராந்தகத்தில் உள்ள ஓட்டலில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார்.

மனைவி பெயர் சுதாமதி.. 25 வயது ஆகிறது.. இருவரும் காதலித்து 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்தவர்கள். மதுராந்தகம் கழனிபாக்கம் பகுதியில் வசித்து வருகின்றனர்.

 கரண்ட் ஷாக்

கரண்ட் ஷாக்

இவர்கள் இருவருக்கும் 3 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 2 வயதில் இன்னொரு ஆண் குழந்தையும் உள்ளன.. தம்பதி இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது.. இதனால் அடிக்கடி தகராறும், சண்டையும் வீட்டிற்குள் வெடித்துள்ளது.. இந்நிலையில் சம்பவத்தன்று, சுதாமதி, துணிகளுக்கு அயன் செய்து கொண்டிருந்தாராம்.. அப்போது திடீரென கரண்ட் ஷாக் அடித்து, சுதாமதி இறந்துவிட்டதாக, ரஞ்சித் குமார் உறவினர்களுக்கு போனை போட்டு சொல்லி உள்ளார்... இதனால், பதறிக் கொண்டு உறவினர்கள் ஓடிவந்தனர்..

 அயர்ன் பாக்ஸ்

அயர்ன் பாக்ஸ்

சுதாமதியின் சடலத்தை பார்த்து கதறி அழுதனர்.. கரண்ட் ஷாக் அடித்து சுதாமதி இறந்துவிட்டதை போலீசுக்கு சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் சொன்னாராம் ரஞ்சித்குமார்... அப்படி தெரிந்தால், சுதாமதியின் உடலை போஸ்ட் மார்ட்டம் செய்துவிடுவார்கள் என்றும், போலீசாருக்கு தெரிவதற்குள் நாமே, இறுதி சடங்குகளை நடத்தி விடலாம் என்றும், உறவினர்களிடம் ரஞ்சித்குமார் கூறியுள்ளார்... பிறகு, அவசர அவசரமாக சுதாமதிக்கு இறுதி சடங்குகளையும் அவரே செய்ய துவங்கினார்.

 போஸ்ட் மார்ட்டம்

போஸ்ட் மார்ட்டம்

ஆனால், அதற்குள் சுதாமதியின் உறவினர்கள் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது... உடனடியாக மதுராந்தகம் போலீசுக்கும் தகவலை சொல்லி உள்ளர்கள்.. இதையடுத்து போலீசாரும் விரைந்து வந்து சுதாமதியின் சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்... அப்போதுதான், சுதாமதியின் தலையில், பலமாக தாக்கப்பட்ட காயம் இருந்துள்ளதும் தெரியவந்தது.. இதையடுத்து, ரஞ்சித்குமாரிடம் தங்கள் பாணியில் விசாரிக்க துவங்கினார்கள் போலீசார்.. அப்போதுதான் அனைத்து உண்மைகளையும் ரஞ்சித் குமார் ஒப்புக் கொண்டார்..

 ஒயர்

ஒயர்

சம்பவத்தன்று வேலையை முடித்து வீட்டுக்கு வரும்பொழுது, சுதாமதி யாருடனோ போனில் பேசிக் கொண்டிருந்தாராம்.. அதை பார்த்ததுமே ஆத்திரம் அதிகமாகி, கீழே கிடந்த கட்டையால் பலமாக தாக்கியுள்ளார்.. இதனால் தலையில் பலமாக அடிபட்டு, அங்கேயே ரத்த வெள்ளளத்தில் சரிந்துள்ளார்.. அப்போதும் ஆத்திரம் தீராமல், சுதாமதியின் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார் ரஞ்சித்குமார்.. இவ்வளவும் விசாரணையில் உறுதியானதையடுத்து, ரஞ்சித்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்..

 விடிகாலை

விடிகாலை

5 வருடங்களுக்கு முன்பு ஒரு தனியார் கம்பெனியில் இவர்கள் ஒன்றாக வேலைபார்த்தபோது காதல் பிறந்துள்ளது.. ஆனால், திருமணம் ஆனதில் இருந்தே, நிறைய தகராறுகள் இவர்களுக்குள் வந்துபோயுள்ளதாக சொல்கிறார்கள்.. எப்போதுமே நள்ளிரவை தாண்டி அல்லது விடிகாலை நேரத்தில்தான் வேலை முடிந்து வீட்டுக்கு வருவாராம் ரஞ்சித்.. அப்படித்தான், கடந்த 4-ந்தேதி அதிகாலை 2.30 மணிக்கு வேலையை முடித்து வீட்டுக்கு வந்துள்ளார்.. அந்த நேரத்தில் சுதாமதி போனில் யாருடனோ சிரித்து பேசிக் கொண்டிருக்கவும், ஆத்திரம் அதிகமாகி உள்ளது..

அயர்ன்பாக்ஸ்

அயர்ன்பாக்ஸ்

போனில் யார் என்று சந்தேகப்பட்டு விசாரிக்கும்போது, தம்பதிக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.. இறுதியில் கொலை வரை சென்றுவிட்டது.. முதலில் கட்டையால் அடித்ததுமே, ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்துள்ளார் சுதாமணி.. உயிர் போகாததால், அயன்பாக்ஸ் ஒயரை எடுத்து வந்து கழுத்தில் மாட்டி இறுக்கியுள்ளார்.. இதில்தான் சுதாமதி மூச்சுத் திணறி உயிரிழந்ததாக சொல்கிறார்கள்.. அதற்கு பிறகுதான், கொலையை மறைப்பதற்காக துணியை அயன் செய்வதுபோல் செட்டிங் செய்துள்ளார் ரஞ்சித்.. அப்பா, அம்மாவை காணாமல், அந்த பிஞ்சு குழந்தைகள் இன்று கதிகலங்கி நிற்கின்றன..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+