"தீட்டு" பட்டுடுச்சே.. ஐயோ, அந்த "சாதி"யா?.. கடப்பாரையை எடுத்த செல்வம்.. ஸ்டேஷனில் நுழைந்த கர்ப்பிணி
வளைகாப்பு முடித்த கையோடு, இளம்பெண் ஒருவர் போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்து புகார் தந்துள்ளார்
கள்ளக்குறிச்சி: கர்ப்பிணி பெண் ஒருவர் ஆவேசமாக போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்த சம்பவம், விழுப்புரத்தையே விக்கித்து போக வைத்துள்ளது.. என்ன காரணம்? சங்கராபுரத்தில் என்ன நடந்தது?
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ளது தேவபாண்டலம் என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் முத்துசாமி. இவரது மகள் கல்பனா.. எம்.பி.எட் ஆசிரியர் பட்டப்படிப்பு முடித்தவர்.
இவரும், அதே கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரும் கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்தனர்.. இவர்களின் காதலை 2 வீட்டிலுமே ஏற்றுக் கொண்டனர்.. 2 வீட்டு பெரியவர்களும், இவர்களின் திருமணத்தை கடந்த வருடம் நடத்தியும் வைத்தனர்.

காதல் திருமணம்
மகிழ்ச்சியுடன்தான் குடும்ப வாழ்க்கையை துவக்கி உள்ளனர்.. ஆனால், மெல்ல மெல்ல பிரச்சனை வெடித்துள்ளது.. கல்பனா மாற்று சமூகத்தை சேர்ந்தவராம்.. அதனால், கணவர் வெங்கடேசனின் உறவினர் செல்வம் என்பவர், கல்பனாவை சாதியை காரணம் காட்டி துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது.. கல்பனா ஏதாவது கல்யாணத்துக்கு சென்றாலோ, அல்லது சுப நிகழ்ச்சிகளுக்கு சென்றாலோ, அங்கே இந்த வெங்கடேசன் சென்றுவிடுவாராம்.. கல்பனாவின் சாதி பெயரை சொல்லி எல்லார் முன்னாடியும் அசிங்கப்படுத்தி வந்துள்ளார்.. நாளடைவில் கல்பனாவை, சாதியை சாக்காக வைத்தே தள்ளி வைத்துள்ளார் செல்வம்..

தண்ணீர் தண்ணீர்
குடிநீர்குழாயில் தண்ணீர் பிடிக்க போனால்கூட, ''உன்னை யார் இங்கே வரசொன்னது? நீ இங்கே வந்து தண்ணீர் பிடிக்கக்கூடாது.. நீ தண்ணீர் பிடித்தால் நாங்கள் தீட்டாகி விடுவோம்'' என்று செல்வம் முகத்தில் அடித்தாற்போல் சொல்லி, கல்பனாவை மனம்புண்படும்படி பேசிவந்திருக்கிறார்... இதையெல்லாம் கல்பனாவின் கணவர் வெங்கடேசனுக்கு தெரிந்தாலும், ஆரம்பத்தில் பெரிதுபடுத்தாமல் இருந்திருக்கிறார்.. ஆனால், தன் மனைவியை மிக மோசமாக நடத்துவதை பார்த்ததுமே, செல்வத்திடம் நேரடியாகவே கேட்டுள்ளார்.. "என் மனைவியை சாதி பெயரை சொல்லி ஏன் அசிங்கப்படுத்துகிறாய்? என்று கேட்டுள்ளார்.. இதனால் செல்வத்துக்கும் - வெங்கடேசனுக்கும் பலமுறை தகராறும் வந்து போயுள்ளது.. இதனிடையே, கல்பனா கர்ப்பமானார்.

குழிதோண்டல்
7 மாத கர்ப்பிணியான அவருக்கு, அதே கிராமத்தில் உள்ள சமுதாய கூடத்தில் வளைகாப்பு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினார் கணவர் வெங்கடேசன்.. அடுத்தவர் வீட்டு விசேஷத்துக்கு கல்பனா சென்றாலே, தகராறு செய்யும் செல்வம், கல்பனாவுக்கே விசேஷம் என்றதும் கொந்தளித்துவிட்டார்.. வளைகாப்பு நிகழ்ச்சியை முடித்துவிட்டு கல்பனாவை வீட்டிற்கு அழைத்து வந்து கொண்டிருந்தார் வெங்கசேடன்... அப்போது, அங்கு சென்ற செல்வம், கல்பனாவை செல்ல விடாமல் வழிமறித்தார்.. அங்கிருந்து அவரை நகர விடாமல் தடையும் செய்தார்.. ,இதற்காகவே நடுரோட்டில் ஒரு பெரிய குழியை தோண்டியுள்ளார்.. இதனால் ஆத்திரமடைந்த கல்பனா, நேரடியாகவே செல்வத்திடம் வாக்குவாதம் செய்தார்.

கடப்பாரை
கல்பனா தன்னை எதிர்த்து பேசவும், இன்னும் ஆவேசமடைந்த செல்வம், ''நீ இங்கே வந்தால், கடப்பாரையால் உன்னை கொன்று போட்டு புதைத்து விடுவேன்.. இந்த குழியை வெட்டியதும் அதுக்காகத்தான்.. உன் வயிற்றில் எங்க சாதி குழந்தை வளர கூடாது.. அந்த குழந்தை பிறந்துவிட்டால், நாங்க எல்லோருமே தீட்டாகி விடுவோம்.. மரியாதையா உன் அம்மா வீட்டுக்கு ஓடிடு.. இல்லாவிட்டால், உன் வயிற்றில் இருக்கும் குழந்தையை நீயே கொன்றுவிடு... அப்படியும் இல்லாவிட்டால், உன்னை கடப்பாரையாலேயே அடித்து நானே கொன்றுவிடுவேன் என்று கடும்கோபத்தில் கத்தினார்.

கலங்கிய கல்பனா
இதனால் கல்பனா அதிர்ந்து போனார்.. வெங்கடேசனுக்கும் என்ன செய்வது என்றே புரியாமல் திகைத்தார்.. வீட்டுக்கும் செல்ல முடியாமல் தவித்தபடி நின்றனர்.. இறுதியில், வெங்கடேசனை அழைத்து கொண்டு, நேராக சங்கராபுரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றுவிட்டார் கல்பனா... நிறைமாத கர்ப்பிணி ஒருவர், வளைகாப்பு நிகழ்ச்சியில் இருந்து ஸ்டேஷனுக்குள் நுழைந்ததை பார்த்ததுமே போலீசாரும் திகைத்தனர்.. சாதியை காட்டி பிரச்சனை செய்து வரும் செல்வம் பற்றி ஒன்றுவிடாமல் போலீசாரிடம் சொல்லி, புகாரையும் தந்து, அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்பனா கேட்டுக் கொண்டார்.. இந்த புகாரின்பேரில் போலீசாரும் விசாரணையை கையில் எடுத்துள்ளனர்.

உளவியல் பார்வை
"இப்பவெல்லாம் யார் சாதி பார்க்கிறாங்க.. காலம் மாறிடுச்சு" என்று உதடுகள் முணுமுணுத்தாலும் நடைமுறையில் அப்படி இல்லை என்பதை பல சம்பவங்களின் சாட்சியாகி கொண்டிருக்கின்றன.. சட்டங்கள் கடுமையாக இருந்தாலும்கூட, சாதி சார்ந்த குற்றங்கள் அதிகரித்தபடி வருவதை மறுக்கவும் முடியாது.. அதற்கேற்றபடி சாதிய வன்மங்களும் குறையாமல், நிறைந்தே காணப்படுகின்றன.. இதற்கெல்லாம் காரணம், சமூகத்தின் மனம் மாறவில்லை. அத்துடன், சாதி சார்ந்த உளவியலும் மாறவில்லை என்பதை நாம் அழுத்தமாக சுட்டிக்காட்ட வேண்டி உள்ளது..!!
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications