பெங்களூரு கலவரத்தில் தமிழக தொழிலாளி அடித்துக் கொல்லப்பட்டாரா?
நாகப்பட்டனம்: பெங்களூரில் நடந்த கலவரத்தின்போது தனது கணவரை சிலர் அடித்துக் கொன்று விட்டதாக நாகப்பட்டனம் மாவட்டம் கொள்ளிடத்தைச் சேர்ந்த சுதா என்ற பெண் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
கை மாவட்டம் கொள்ளிடம் அடுத்த கோதண்டபுரத்தை சேர்ந்தவர் வடிவேல் (42). தச்சராக இருந்து வந்தார். இவரது மனைவி பெயர் சுதா. இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். 8 வருடம் பெங்களூரு காந்தி நகரில் தங்கி தச்சுத்தொழில் செய்து வந்தார். கடந்த ஒரு ஆண்டாக கடலூர் முதுநகர் இருசப்ப செட்டி தெருவில் உள்ள மாமியார் வீட்டில் குடும்பத்துடன் வடிவேல் வசித்து வந்தார்.

கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி பெங்களூரு போயிருந்தார் வடிவேல். இந்த நிலையில் கடந்த 12ம் தேதி கடலூர் எஸ்பி அலுவலகத்திலிருந்து வடிவேலின் குடும்பத்தினரை தொடர்பு கொண்ட போலீஸார், கடந்த 6ம் தேதி பெங்களூரு சாந்தி நகர் பகுதியில் நடைபாதையில் வடிவேல் இறந்து கிடந்ததாகவும், அவரது உடல் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் உள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்தார் வடிவேலின் மனைவி சுதா. உடனடியாக கடலூர் எஸ்.பி. மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவரைச் சந்தித்து மனு கொடுத்தார். அதில், எனது கணவர் நல்ல உடல்நலத்துடன் பெங்களூரு சென்றார். அவரது சாவில் சந்தேகம் இருக்கிறது. அங்கு காவிரி பிரச்னை தொடர்பாக நடந்த கலவரத்தில் எனது கணவரை கொன்று விட்டனர். அவரது உடலை கொள்ளிடத்துக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த நிலையில் வடிவேலின் உடல் பெங்களூரிலிருந்து கடலூர் கொண்டு வரப்பட்டு பின்னர் அடக்கம் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications