டீசல் விலை லிட்டருக்கு 50 காசு உயர்வு: நள்ளிரவு முதல் அமல்

டீசல் விலை லிட்டருக்கு 50 காசு உயர்த்தப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் நேற்று இரவு அறிவித்தன. இதையடுத்து புதிய விலை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.
டீசல் மீதான கட்டுப்பாட்டை படிப்படியாக அகற்றும் மத்திய அரசின் திட்டப்படி, டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அடிக்கடி உயர்த்தி வருகின்றன. இந்த ஆண்டு மட்டும் இதுவரை 11 முறை டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் டீசல் விலை லிட்டருக்கு 50 காசு உயர்த்தப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் நேற்று அறிவித்தன. ஆனால் பெட்ரோல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த விலை உயர்வின்படி டெல்லியில் டீசல் லிட்டருக்கு வரி உள்பட 57 காசுகள் உயர்த்தப்பட்டு, ரூ.53.67-க்கு விற்கப்படுகிறது. மும்பையில் ரூ.60.08 ஆக இருந்த டீசல், விலை அதிகரிப்புக்குப் பிறகு ரூ. 60.70 ஆக உயர்ந்துள்ளது.
சர்வதேச சந்தையின் மதிப்புக்கு ஏற்ப ஒவ்வொரு மாதத்தின் முதல் மற்றும் 16 ந் தேதிகளில் பெட்ரோல் -டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அதே நேரத்தில் கடந்த 1ந் தேதி உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications